சூப்பரா தம்பி.. சூப்பர்.. இணையத்தை கலக்கும் லோ பட்ஜெட் ஜகமே தந்திரம்!

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் கட்சியை அப்படியே நடித்துக்காட்டி அசத்தியுள்ளது ஒரு இளைஞர் கூட்டம்.

FOLLOW US: 

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக ஜகமே தந்திரம் படத்தை சேர்ந்த பல பிரபலங்கள் அவர்களுடைய படைப்பை வியந்து பாராட்டி வருகின்றனர். Ikorodu Bois என்று அழைக்கப்படும் அந்த குழுவினர் பல நகைச்சுவையான வீடியோக்களை பதிவேற்றுவதில் மிகவும் பிரபலம், அதே சமயம் படங்களின் காட்சிகள் மற்றும் ட்ரைலர்களை அப்படியே மிமிக்கிரி செய்து வெளியிடுவதும் அவர்களது வழக்கம். இந்நிலையில் அண்மையில் வெளியான கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் கட்சியையும் அப்படியே மிமிக்கிரி செய்து வெளியிட்டு அசத்தியுள்ளார். 

Ikorodu என்பது நைஜீரியா நாட்டில் ஒரு நகரம் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நைஜீரியா இளைஞர்கள் மாற்றும் குழந்தைகளின் சிந்தனை மற்றும் செயல்பாட்டை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒரு லோ பட்ஜெட் ஜகமே தந்திரம் படத்தை கண்முன் காட்டியுள்ளனர் இந்த குழுவினர். Netflix நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த காணொளியை பகிர்ந்த நிலையில் ஜகமே தந்திரம் படக்குழுவினர் சூப்பரா தம்பி சூப்பர் என்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ட்ரைலர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்கள் வெளியிடும் காணொளி மற்றும் புகைப்படங்களை கூடு இந்த ikorodu B குழுவினர் மிமிக்கிரி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கான பணிகள் 2018ம் ஆண்டுக்கு முன்பே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதலில் தேனாண்டாள் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்து நிலையில் சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் இந்த படம் கடந்த 2019ம் ஆண்டு YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று 2019 டிசம்பர் வாக்கில் படப்பிடிப்பு முடிவடைந்தது. அதன் பிறகு 2020ம் ஆண்டு மே மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் OTT தளத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக அப்போது கூறப்பட்டது. இறுதியில் தற்போது நெட்பிலிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை OTT தளத்தில் வெளியிடவுள்ளது.  

Yuvanshankar Raja | இரவுப் பொழுதை அழகாக்கும் யுவன்சங்கர் ராஜாவின் டாப் பாடல்கள் !   

வருகிற  ஜூன் 18-ஆம் தேதி தனுஷின் ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து இந்தப்  படம் தமிழ் ,தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஓடிடியில் வெளியாகும் தமிழ்ப்படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: Jagame Thandhiram Trailer Ikorodu Bois Trailer Mimickers

தொடர்புடைய செய்திகள்

‛சர்கார் பார்த்தாச்சு... சர்தார்  பாக்கணுமே....’ ஜூலை 10ல் மீண்டும் துவக்கம்!

‛சர்கார் பார்த்தாச்சு... சர்தார் பாக்கணுமே....’ ஜூலை 10ல் மீண்டும் துவக்கம்!

‛நொந்து போன எங்களை நோண்டாதீங்கடா...’ தல ரசிகர்களை வெறுப்பேற்றும் போலி வலிமை அப்டேட்!

‛நொந்து போன எங்களை நோண்டாதீங்கடா...’ தல ரசிகர்களை வெறுப்பேற்றும் போலி வலிமை அப்டேட்!

Actor Prabhas | 150 கோடி ! பணத்துக்கு ஆசைப்படாத பாகுபலி பிரபாஸ்; திகைப்பில் முன்னணி பிராண்டுகள்..!

Actor Prabhas | 150 கோடி ! பணத்துக்கு ஆசைப்படாத பாகுபலி பிரபாஸ்; திகைப்பில் முன்னணி பிராண்டுகள்..!

VijaySethupathi | ”உங்களை நேர்ல பார்க்கணும்” : குட்டி ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய மக்கள் செல்வன்..!

VijaySethupathi | ”உங்களை நேர்ல பார்க்கணும்” : குட்டி ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய மக்கள் செல்வன்..!

MJ Anniversary: 'JUST BEAT IT' - அன்றும், என்றும் இசைக்கும் மாபெரும் இசை கலைஞர் எம்.ஜேவின் நினைவு நாள் !

MJ Anniversary:  'JUST BEAT IT' - அன்றும், என்றும் இசைக்கும் மாபெரும் இசை கலைஞர் எம்.ஜேவின் நினைவு நாள் !

டாப் நியூஸ்

Sivakasi Jayalakshmi Cheating Case: ‛என்னையே ஏமாத்திட்டாங்க...’ 10 ஆண்டுகளுக்கு பின் ‛கம் பேக்’ சிவகாசி ஜெயலட்சுமி!

Sivakasi Jayalakshmi Cheating Case: ‛என்னையே ஏமாத்திட்டாங்க...’ 10 ஆண்டுகளுக்கு பின் ‛கம் பேக்’ சிவகாசி ஜெயலட்சுமி!

கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கு: மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு தள்ளுபடி

கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கு: மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு தள்ளுபடி

Girl Harassment Case: ‛கன்’னும் என்னோடது தான்... பொண்ணும் என்னோடது தான்... போக்சோ காமுகன் எஸ்.ஐ., சதீஷ் கதை!

Girl Harassment Case: ‛கன்’னும் என்னோடது தான்... பொண்ணும் என்னோடது தான்... போக்சோ காமுகன் எஸ்.ஐ., சதீஷ் கதை!

கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு