Yuvanshankar Raja | இரவுப் பொழுதை அழகாக்கும் யுவன்சங்கர் ராஜாவின் டாப் பாடல்கள் !
இரவு நேரங்களில் கேட்க மனதிற்கு இன்பம் தரும் யுவன்சங்கர் ராஜாவின் பாடல்கள் என்னென்ன?
தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏஆர்.ரஹ்மான் ஆட்டி வைத்திருந்த காலத்தில் பிற்பகுதியில் நுழைந்தவர் யுவன்சங்கர் ராஜா. தனக்கு என்று ஒரு பாணியை பிடித்து அதில் மிகவும் சிறப்பாக இசையமைத்து கொண்டி வந்தார். தந்தையின் சாயல் தெரியாதபடி அவருக்கு என்று ஒரு ஸ்டைல் பிடித்து அதில் ஹிட்டிற்கு மேல் ஹிட் பாடல்களை கொடுத்து யுவன் அசத்தி வந்தார். இவருடைய பாடல்களில் இரவு நேரங்களில் கேட்க கூடிய பாடல்கள் என்னென்ன?
1. சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்:
அஜித் நடிப்பில் வெளியான தினா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஹரிஹரன் பாடியிருப்பார். இந்தப் பாடல் காலத்திற்கும் அழியாத யுவன் பாடல்களில் ஒன்று. இதில்,
"காதல் இருக்கும்
பயத்தினில் தான் கடவுள்
பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான்
வீதியிலே…."
2. காதல் வைத்து:
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தீபாவளி. இந்தத் திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் யுவனின் இசையில் சிறப்பாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட பாட்டுதான் இது. இப்பாடலை விஜய் யேசுதாஸ் சிறப்பாக பாடியிருப்பார். இதில்,
"கடலோடு பேச
வைத்தாய் கடிகாரம் வீச
வைத்தாய் மழையோடு
குளிக்க வைத்தாய் வெயில்
கூட ரசிக்க வைத்தாய்..."
3. தாவணி போட்ட தீபாவளி:
விஷால் நடித்த தாமிரபரணி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இதை விஜய் யேசுதாஸ் மற்றும் ஸ்ரேயா கோஷல் சிறப்பாக பாடியிருப்பார்கள். இப்பாடலின் வரிகளும் மிகவும் அழகாக இருக்கும். குறிப்பாக,
"இரவும் வருது பகலும்
வருது எனக்கு தெரியல இந்த
அழகு சரிய மனசு எரிய
கணக்கு புரியல.."
4. துளி துளி:
கார்த்திக் நடிப்பில் வெளியான பையா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடத்தில் வரும் அட டா மழை டா, என் காதல் சொல்ல நேரம் இல்லை என அனைத்தும் மெகா ஹிட் அடித்த பாடல்கள். அந்த வரிசையில் இந்தப் பாடலும் ஒன்று. இதை ஹரிசரண் சிறப்பாக பாடியிருப்பார். இந்தப் பாடல் வரிகளும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக,
"சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் தோள்களில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்...."
5. முன்பனியா முதல் மழையா:
சூர்யா நடிப்பில் வெளியான நந்தா திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்று இருக்கும். யுவன் சங்கர் ராஜா மற்றும் எஸ்பிபி காம்போவில் சிறப்பான பாடல் என்று இதை குறிப்பிடலாம். யுவனின் இசை மற்றும் எஸ்பிபியின் குரல் நம்மை கேட்கும்போதே மெய்மறக்க செய்துவிடும். அதேபோல பாடலின் வரிகளும் அவ்வளவு அழகாக இருக்கும். குறிப்பாக,
"என் பாதைகள்
என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து
முடியுதடி என் இரவுகள்
என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய
ஏங்குதடி... "
இவை தவிர என் அன்பே, நினைத்து நினைத்து பார்த்தேன், கண்பேசும் வார்த்தைகள் என யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பல சிறப்பான பாடல்கள் அமைந்துள்ளன.
மேலும் படிக்க: ஸ்ரேயா கோஷலின் டாப் ஸ்வீட் மெலடீஸ்..!