’நித்தியானந்தாவை திருமணம் செய்ய ஆசை' - பிரபல நடிகை பிரியா ஆனந்த்
சாமியார் நித்யானந்தாவிடம் ஏதோ இருக்கிறது எனவும், அவரை திருமணம் செய்ய ஆசை உள்ளதாகவும் பிரபல நடிகை பிரியா ஆனந்த் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழில் வாமனன் என்ற திரைப்படத்தில் கதாநாயாகியாக நடித்து அறிமுகமானவர் பிரியா ஆனந்த். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்ததாலும், ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் வளர்ந்ததாலும், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுவார்.
ஆங்கிலம், வங்காள மொழி, இந்தி, மராத்தி ஆகிய மொழிகளையும் பேசுவார். அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார். இதுவரை 25 க்கும் மேற்பட்ட தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பைப் போல் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இயங்கி வரும் பிரியா ஆனந்த், அதில் அவ்வப்போது தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
இவர் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருந்த சில கருத்துக்கள் வைரலாகி வருகிறது. மாதத்திற்கு இரண்டு முறையாவது அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் நித்தியானந்தா குறித்து பதிவிட்டு வரும் பிரியா ஆனந்த், யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று பேட்டியளித்தார். அப்போது மீம்ஸ்கள் மற்றும் நித்தியானந்தா குறித்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பிரியா ஆனந்த் பதிலளித்தார். ”மீம்ஸ்கள் எனக்கு பிடிக்கும். தமிழ் மொழியில் உள்ள நக்கல், காமெடி வேறு எந்த மொழியிலும் இல்லை.
நித்தியானந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நித்யானந்த், பிரியா ஆனந்த் என்று பெயர்கள் இருப்பதால் நித்தியானந்தாவை கல்யாணம் செய்தால் என்னுடைய பெயரைக் கூட மாற்ற வேண்டிய தேவை இருக்காது. எப்படியாவது யாராவது வதந்திகளைப் பரவ செய்வதால் நானும் சந்தோஷமாக இருப்பேன். அவருக்கு எல்லோரையும் சுலபமாக ஈர்க்கத் தெரியும். நித்தியானந்தாவை இத்தனை பேர் பின் தொடருகிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தான் அர்த்தம்'' எனத் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளால் மிகவும் பிரபலமான சாமியாராக வலம் வருபவர் நித்தியானந்தா. இவர் தற்போது தனக்கென்று கைலாசா என்று தனித் தேசத்தையே உருவாக்கியுள்ளார். அவ்வப்போது, கைலாசாவில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நித்தியானந்தா வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நித்யானந்தா மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் சமாதி நிலை அடைந்துவிட்டதாகவும் அடுத்தடுத்து தகவல் வெளியாகி வந்தது. நித்தியானந்தாவும் தனக்காக பக்தர்கள் வேண்டிக்கொள்ளுங்கள் என்று கூறினார். பின்னர், தான் திரும்ப வந்துட்டேன் என்று நித்தியானந்தா தனது கைப்பட எழுதிய கடிதத்தின் புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்