(Source: ECI/ABP News/ABP Majha)
Shree Rapaka: கல்யாணத்துக்கு முன்னாடி உடலுறவு ரொம்ப அவசியம்.. பிரபல நடிகை கருத்தால் வெடித்த சர்ச்சை
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரபாகா தெரிவித்துள்ள கருத்து, சமூக வலைத்தளத்தில் கடும் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரபாகா தெரிவித்துள்ள கருத்து, சமூக வலைத்தளத்தில் கடும் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
தொழில்நுட்பங்கள் மாறிவிட்ட காலக்கட்டத்தில் எந்த கருத்தாக இருந்தாலும் அதனை சரியாக கூறாவிட்டால் அவ்வளவு தான். எங்கிருந்து கல் எறியப்படுகிறது என்பதை தெரியாத அளவுக்கு விமர்சனங்கள் வரும். அதுவும் பிரபலங்கள் என்றால் சொல்லவா வேண்டும். அவ்வளவு தான் குடும்பம்,தொழில் என அனைத்தையும் வைத்து விமர்சனம் செய்து விடுவார்கள். இதில் சிலர் பிரபலம் ஆக வேண்டும் என்றே சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பார்கள்.
பல தெலுங்கு படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் ஸ்ரீ ரபாகா. இவர் சர்ச்சைக்குரிய இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கிய நக்னத் படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். இவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இதனிடையே திருமணம் குறித்து ஸ்ரீ ரபாகா கருத்து தெரிவித்துள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் வெளியிட்ட தகவல் இணையத்தில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
அதாவது பெண் திருமணத்திற்கு முன் அவரது வருங்கால கணவருடன் உடலுறவு கொள்வது தவறல்ல. காரணம் திருமணத்திற்குப் பிறகு அந்த நபர் ஆண் இல்லை என்று தெரிந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் தான் இப்படி சொல்வதற்கு காரணம், தனது தோழிக்கு நடந்த ஒரு சம்பவம் தான் எனவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “என்னுடைய தோழி டாக்டரை ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் முதலிரவிலேயே தன் கணவர் தன் பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிந்து மனம் நொந்து விட்டார். இதனால் அவளது வாழ்க்கை என்னவாகும் என யோசித்து பாருங்கள். ஒருவேளை திருமணத்திற்கு முன் அவள் உடலுறவு கொண்டு இருந்தால் அந்த நபர் எப்படிப்பட்டவர் என்பது தெரிந்திருக்கும். ஒவ்வொரு ஆணுக்கும் செக்ஸ் இன்றியமையாதது என்பதே என்னுடைய எண்ணம். அப்படி இல்லற சுகம் கொடுக்க முடியாதவரை திருமணம் செய்து கொண்டு வருத்தப்படுவது சரியானது அல்ல” என்று ஸ்ரீரபாகா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: ‘வீசும் காற்றில் விஷம் பரவட்டும்' .. பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. கொதித்தெழுந்த ஜி.வி.பிரகாஷ்