மேலும் அறிய

‘வீசும் காற்றில் விஷம் பரவட்டும்' .. பள்ளி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு.. கொதித்தெழுந்த ஜி.வி.பிரகாஷ்

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவன், சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் ஆவேசமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவன், சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் ஆவேசமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்லிக்கொடுக்கும் கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது அடிமைத்தனத்தில் தொடங்கி குற்றச்சம்பவங்கள் வரை நீண்டுக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தமிழ்நாடு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அங்குள்ள நாங்குநேரி பகுதியில் முனியான்டி என்ற கூலித் தொழிலாளி தனது மனைவி அம்பிகா, மகன் சின்னத்திரை, மகள் சந்திர செல்வி ஆகியோரோடு வசித்து வந்தார்.  சின்னத்துரை வள்ளியூரில் உள்ள அரசு  உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதே பள்ளியில் நாங்குநேரியைச் சேர்ந்த சில மாணவர்களும் படிக்கிறார்கள். அந்த மாணவர்கள் சின்னத்துரையிடம் சாதிய ரீதியான அதிகாரங்களை காட்டியதாக சொல்லப்படுகிறது.  இதனால் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டதாகவும், சின்னத்துரை பள்ளிக்கு போகாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இப்படியான நிலையில் சின்னத்துரை பள்ளிக்கு போகாமல் இருந்துள்ளார். பின்னர் ஒருவாரம் கழித்து மீண்டும் பள்ளிக்கு சென்ற நிலையில், ஆசிரியரிடம் அவர், அந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து தெரிவிக்க, அவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் சின்னத்துரைக்கும், அந்த மாணவர்களுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் நேற்று இரவு சின்னத்துரை வீட்டுக்குள் புகுந்த மாணவர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுக்க வந்த தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பேரன் வெட்டப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார்  ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், ”தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்” என தெரிவித்துள்ளார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
சாதி பார்த்து டிக்கெட் கொடுக்க மறுத்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர்...உண்மை பின்னணி என்ன?
சாதி பார்த்து டிக்கெட் கொடுக்க மறுத்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர்...உண்மை பின்னணி என்ன?
தனுஷின் ஓம் படத்திற்கு நெருக்கடி தருகிறாரா தவெக எம்.எல்.ஏ ரேவந்த் ? திரையரங்குகள் முன்பதிவு தொடங்காததால் சிக்கல்
தனுஷின் ஓம் படத்திற்கு நெருக்கடி தருகிறாரா தவெக எம்.எல்.ஏ ரேவந்த் ? திரையரங்குகள் முன்பதிவு தொடங்காததால் சிக்கல்
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
தங்கத்தில் கலக்கப்படும் புதுவித ரசாயனம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - உங்களிடம் உள்ள தங்கம் தூய்மையானதா?
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை காலை 10 முதல் மாலை 3 மணி வரை மின்தடை.. உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க!
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Road Infrastructure: சென்னை OMR, GNT சாலை முதல்.. ரூ.6,513 கோடியில் மெகா திட்டம்.. உங்கள் ஊர் லிஸ்டில் இருக்கா?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?
மீண்டும் தொடங்கப்படும் நீலகிரி மலை ரெயில் சேவை! - எப்போது தெரியுமா?
”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?
”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
Embed widget