Fahadh Faasil: ரஜினிக்கு வில்லனான ‘ரத்னவேலு’ ஃபஹத்...சம்பளம் இத்தனை கோடிகளா....அதிர்ச்சியில் கோலிவுட்!
Fahadh Faasil: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்தில் இணையும் ஃபகத் ஃபாசில் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் பகத் பாசிலுக்கு (Fahadh Faasil) வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், இதனால் அவர் சம்பளத்தையும் மளமளவென உயர்த்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஃபகத் ஃபாசில். இவருக்கு தற்போது பிற மொழிகளிலும் மவுசு அதிகரித்துள்ளது. இவர் தமிழில் விக்ரம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், குறிப்பாக மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் பகத் பாசிலுக்கு வில்லன் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ஃபகத் ஃபாசில்.
சொல்லப்போனால் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு பகத் பாசிலின் மவுசு கூடி இருக்கிறது. அடுத்ததாக ஃபகத் ஃபாசில் வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ள திரைப்படம் தான் தலைவர் 170. இப்படத்தில் ஃபகத் ஃபாசில் நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தி இருக்கிறாராம் பகத். ஹீரோவுக்கு தனி, வில்லனுக்கு தனி என கேட்டகிரி பிரித்து சம்பளம் வாங்கி வருகிறாராம்.
இதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் அவர் ஹீரோ கதாப்பாத்திரத்தைக் காட்டிலும், வில்லன் கதாப்பாத்திரத்திற்கு தான் அதிக சம்பளம் வாங்குகிறாராம். ஹீரோவாக நடிக்க ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கும் அவர், வில்லனாக நடிக்க ரூ.8 கோடி சம்பளம் கேட்கிறாராம். தற்போது ரஜினியின் தலைவர் 170 படத்துக்காக அவருக்கு ரூ.8 கோடி தான் சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினியின் 170 வது திரைப்படத்தை ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். லைகா நிறுவன தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் ரமலையாள நடிகை மஞ்சு வாரியர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் ஃபகத் ஃபாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைய உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.
மாமன்னன் படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நெட்டிசன்கள் இவரை நடிப்பு அரக்கன் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர். தமிழில் இதற்கு முன் நம்பியார், ரகுவரன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர்கள் வில்லனாக நடித்து மக்கள் மனதில் தனி இடம் பிடித்த நிலையில், இந்த வரிசையில் இப்போது ஃபகத் ஃபாசில் இணைந்துள்ளார். நெகட்டிவ் ரோலில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் பகத்.
மேலும் படிக்க