மேலும் அறிய

Entertainment Headlines: கீர்த்தி பாண்டியன் குறித்து அசோக் செல்வன்! வடிவேலு பற்றி பயில்வான் ரங்கநாதன் குற்றச்சாட்டு - சினிமா ரவுண்ட்அப்

இன்றைய பொழுதுபோக்கு முக்கிய தலைப்புச் செய்திகளை கீழே பார்க்கலாம்.

Mansoor Ali Khan: மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்! த்ரிஷாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் சிரஞ்சீவி, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திலும் மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்ததுடன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அபராத தொகையை இரண்டு வாரங்களில் அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க

Ashok Selvan: "கீர்த்தி பாண்டியனுக்கு நான் ஓனர் கிடையாது" அட்டகாசமான பதில் தந்த அசோக் செல்வன்!

அசோக் செல்வனின் நடிப்பில் நேற்று சபாநாயகன் திரைப்படம் திரைக்கு வந்த நிலையில்,  படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருமணத்துக்குப் பின்னர் தொடர்ந்து நடிப்பேன் என கீர்த்தி பாண்டியன் பேசியிருந்தது குறித்து அசோக் செல்வனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனுக்கு நான் ஓனர் கிடையாது, அவருக்கு பார்ட்னர் மட்டுமே. அவர் நடிக்கக் கூடாது என ஆர்டர் போட எனக்கு உரிமை இல்லை. கீர்த்தி  தொடர்ந்து நடிப்பதில் எனக்கும் பிரச்சினை இல்லை என கூறி இருந்தார்.மேலும் படிக்க

Bayilvan Ranganathan: 'பெண்ணிடம் தவறாக நடந்த வடிவேலு.. அதற்கு நானே சாட்சி’ - பயில்வான் ரங்கநாதன் குற்றச்சாட்டு

வடிவேலு மீது பயில்வான் ரங்கநாதன் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒரு நேர்காணலில் பேசிய அவர்,வடிவேலு பல அறைகளில் உல்லாசமாக இருந்தார். அதற்கு நானே சாட்சி. பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஷூட்டிங்கின் போது நள்ளிரவில் ஒரு அறையில் பெண் ஒருவர் ஓ..வென கதறினார். நானும் புரொடக்‌ஷன் மேனேஜரும் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தோம். அவர் ஏதோ அப்பெண்ணை பண்ணிவிட்டார்.  அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பார் என என நினைக்கிறேன்” என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் படிக்க

Salaar: பிரபாஸூக்கு 100 கோடியா.. பிருத்விராஜூக்கு அதுல 10 சதவீதம்கூட இல்ல.. ‘சலார்’ படக்குழுவின் சம்பள விவரம்!

சுமார் 400 கோடிகள் பட்ஜெட்டில் சலார் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், பிரமாண்ட மாஸ் நாயகனாக உருவெடுத்துள்ள பிரபாஸ் இந்தப் படத்துக்காக் ரூ.100 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல் படத்தின் லாபத்தில் 10 சதவீதத்தையும் அவர் சம்பளமாகப் பெறுவார் எனக் கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தினர். 

படத்தில் பிரபாஸின் நண்பராக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ரூ.4 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை ஸ்ருதி ஹாசன் இப்படத்துக்காக ரூ.8 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளாராம். மற்றொரு பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபு ரூ.4 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளாராம். கேஜிஎஃப் மூலம் கன்னட சினிமாவின் மார்க்கெட்டை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்ற இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு ரூ.50 கோடிகள் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.மேலும் படிக்க

Vetrimaaran: ‘என் படங்களில் டப்பிங் பிரச்னை இருக்கும்.. அயோத்தி இன்றைய சூழலில் பேசவேண்டிய கதை..’ - வெற்றிமாறன்

சென்னை சர்வதேவ திரைப்பட விழா நேற்று நிறைவுபெற்றது. டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில் பல உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவில் கலந்துகொண்டு விருது  வென்ற இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:

அயோத்தி திரைப்படம் பற்றி இங்கு சொல்ல வேண்டும். படங்களின் நோக்கமும் ரொம்ப முக்கியம். இன்னைக்கு அயோத்தி மாதிரியான கதை பேசப்பட வேண்டிய நோக்கம் இன்றைக்கு உள்ளது. அதற்கு நன்றி. நான் இரண்டு, மூன்று இடங்களில் அயோத்தி படத்தைப் பற்றி பேச மறந்துவிட்டேன். கடந்த சில ஆண்டுகளில் வந்த சிறப்பான படங்களில் அயோத்தியும் ஒன்று” எனப் பேசியுள்ளார்.மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget