Ashok Selvan: "கீர்த்தி பாண்டியனுக்கு நான் ஓனர் கிடையாது" அட்டகாசமான பதில் தந்த அசோக் செல்வன்!
கீர்த்தி பாண்டியனுக்கு நான் ஓனர் கிடையாது என்றும், அவரது பார்டனர் மட்டுமே என அவரது கணவர் அசோக் செல்வன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
அசோக் செல்வன் நடித்துள்ள சபாநாயகன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம்:
கோலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவரான அசோக் செல்வன், பல படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. மேலும் இப்படம் 50 கோடி கிளப்பில் இணைந்தது. தற்போது நடைபெற்று வரும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் போர் தொழில் திரைப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அசோக் செல்வன் கேரியரில் சூப்பர் கம்பேக் கொடுத்த படமாக போர் தொழில் அமைந்தது.
அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் திரைப்படம் நேற்று வெளியானது. காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படமும் அசோக் செல்வனின் வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அசோக் செல்வனுக்கு, நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கண்ணகி, சபாநாயகன்:
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் தம்பதியினருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். இவர்கள் இருவரும் ப்ளூ ஸ்டார் படத்தில் இணைந்து நடித்தனர். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அசோக் செல்வனின் நடிப்பில் நேற்று சபாநாயகன் திரைப்படம் திரைக்கு வந்த நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருமணத்துக்குப் பின்னர் தொடர்ந்து நடிப்பேன் என கீர்த்தி பாண்டியன் பேசியிருந்தது குறித்து அசோக் செல்வனிடம் கேட்கப்பட்டது.
கீர்த்திக்கு நான் ஓனர் இல்லை
அதற்கு பதிலளித்த அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனுக்கு நான் ஓனர் கிடையாது, அவருக்கு பார்ட்னர் மட்டுமே. அவர் நடிக்கக் கூடாது என ஆர்டர் போட எனக்கு உரிமை இல்லை. கீர்த்தி தொடர்ந்து நடிப்பதில் எனக்கும் பிரச்சினை இல்லை என கூறி இருந்தார்.
முன்னதாக கண்ணகி பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கீர்த்தி பாண்டியனிடம் இதே கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது, ”நடிப்பும் ஒரு தொழில் தானே, இத மட்டும் கல்யாணம் ஆகிட்டா செய்யக் கூடாதா? இதே கேள்வியை அசோக் செல்வனிடம் கேட்க முடியுமா? ஆண்கள் திருமணத்திற்கு பின் நடிக்கலாம், ஆனால், நடிகைகளுக்கு மட்டும் என்ன பிரச்சினை? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க