Entertainment Headlines July 23: களைகட்டும் சூர்யா பிறந்தநாள்...ட்ரெண்டிங்கில் கங்குவா, இந்தியன் 2... இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines Today July 23: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
மிரட்டும் கிராஃபிக்ஸ்.. வித்தியாசமான லுக்கில் சூர்யா.. கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இதோ..!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து ‘கங்குவா’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் படிக்க
ஜெயிச்சுட்டோம் மாறா.... நட்சத்திர பிம்பத்திற்குள் அடைபடாத நடிகன்....கங்குவா நாயகன் சூர்யாவின் பிறந்தநாள்..!
இன்று சூர்யா தனது 48ஆவது வயதை எட்டுகிறார். ஒரே நேரத்தில் கமர்ஷியல் வெற்றிகளை கொடுக்கும் நடிகராகவும் அதே சமயத்தில் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்வு செய்யும் நடிகராகவும் சூர்யா கோலிவுட்டில் உலா வருகிறார். தியாகராஜா பாகவதர் – பி யூ சின்னப்பா, எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என தமிழ் சினிமாவில் எல்லா காலமும் நடிகர்களிடையே இருமை கட்டமைக்கப்பட்டு வந்துகொண்டே தான் இருக்கிறது. சூர்யாவையும் இந்த வரிசையில் பல நேரங்களில் இணைக்கவே முயற்சிக்கிறது தமிழ் சினிமா கலாச்சாரம். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இந்த வரையரைகளுக்குள் அடைபடாமலே இருந்து வருகிறார் சூர்யா. மேலும் படிக்க
20 வயது இளமையான கமல்... ஷங்கரின் மற்றுமொரு சாதனை... ‘இந்தியன் 2’ படத்தில் அறிமுகமாகும் டீ ஏஜிங் தொழில்நுட்பம்!
உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு பல புதிய தொழில்நுட்பங்களை இத்தனை காலமாக தொடர்ந்து அறிமுகப்படுத்தியிருக்கிறார். தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இணைந்து மேலும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். அது என்னவென்று பார்க்கலாம்! ஷங்கர் இயக்கி கமல் நடித்திருக்கும் ‘இந்தியன் 2; படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. மேலும் படிக்க
அடேங்கப்பா... ஓப்பன்ஹெய்மராக நடித்த கிலியன் மர்ஃபியின் சம்பளம் இத்தனை கோடிகளா?
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் உலகம் முழுவது வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்தப் படத்தின் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் ராபர்ட் ஜே ஓப்பன்ஹெய்மரின் கதாபாத்திரத்தின் நடித்த கிலியன் மர்ஃபி இந்தப் படத்திற்காக வாங்கிய சம்பளத் தொகை பற்றிய தகவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் படிக்க
'போர் வீரன் நுழைகிறான்' .. கையில் வாளுடன் குதிரையில் சூர்யா.. கங்குவா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!
நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சூர்யா, ஹீரோவாக கடைசியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. தொடர்ந்து விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்த அவர், இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடிப்பதாக இருந்தது. மேலும் படிக்க
நடிகர் சூர்யா பிறந்தநாளில் சோகம்.. பேனர் வைக்க முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சூர்யா இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க
கணவன் சம்பளத்தில் மனைவிக்கும் உரிமை உண்டு.. கறாராக பேசிய பெண்.. அதிர்ந்து போன கோபிநாத்!
ஆண், பெண் என்று இல்லாமல் பொருளாதார ரீதியான சுதந்திரம் என்பது அனைவருக்குமே தன்னம்பிக்கை தரக்கூடிய விஷயம். இருப்பினும், அந்த சுதந்திரம் அனைவருக்கும் அத்தனை எளிதாகக் கிட்டுவதில்லை. குறிப்பாக பெண்களுக்கு அது சவாலான விஷயம்தான். அதுவும் இல்லரசிகளாக இருக்கும் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் என்பது எட்டாக்கனியாகவும் இருக்கும். மேலும் படிக்க