Kanguva First Look: 'போர் வீரன் நுழைகிறான்' .. கையில் வாளுடன் குதிரையில் சூர்யா.. கங்குவா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!
நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யாவின் பயணம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சூர்யா, ஹீரோவாக கடைசியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. தொடர்ந்து விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்த அவர், இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
இயக்குநர் சிவாவுடன் கூட்டணி
இதனிடையே இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில், சூர்யாவின் 13 விதமான தோற்றங்களில் இப்படம் தயாராகி வருகிறது.
இந்த படத்துக்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதற்கு நெருப்பு சக்தி கொண்டவர் மற்றும் மிகவும் வீரம் கொண்டவர் என்று பொருள் உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் கங்குவா படத்தின் ஷூட்டிங் கோவா, எண்ணூர் துறைமுகம், கேரளா ஆகிய இடங்களை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
சூர்யா பிறந்தநாள் ட்ரீட்
இதற்கிடையில் இன்று நடிகர் சூர்யா தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை சிறப்பிக்கும் வண்ணம் நள்ளிரவு 12.01 மணிக்கு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட இந்த வீடியோவில் சூர்யா வித்தியாசமான லுக்கில் உள்ளார். இதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கங்குவா வீடியோவை பார்த்து அசந்து போயுள்ளனர். தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இப்படியான நிலையில் கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் கையில் வாளுடன் போர் களத்தின் நடுவே சூர்யா குதிரையில் வருவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
A warrior. A leader. A King!#Kanguva🦅
— Studio Green (@StudioGreen2) July 23, 2023
Presenting you the #KanguvaFirstLook#GlimpseOfKanguva
▶️https://t.co/REvjXHt1cS#HappyBirthdaySuriya@Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @kegvraja @UV_Creations @KvnProductions @saregamasouth @vetrivisuals @supremesundar pic.twitter.com/MAPs7prTbw