மேலும் அறிய

தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் மச்சக்கண்ணு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ரவிக்குமார்.

ஜோலார்பேட்டை அருகே  மது போதையில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மகன் கட்டையால் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் மச்சக்கண்ணு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ரவிக்குமார். இவர் தினந்தோறும் குடித்துவிட்டு தனது மனைவியான மணிமேகலை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திரும்பவும் அதேபோல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. 

இதனால் மணிமேகலை தனது மகனான சாரங்கபாணிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது சாரங்கபாணியும் குடித்திருந்த காரணத்தால் தந்தை மகன் இருவருக்கும் இடையே கைகலப்பு முற்றியதாக தெரிகிறது.

அப்போது சாரங்கபாணி தனது தந்தையை கட்டையால்  பலமாக தலையில் தாக்கியதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார் ரவிக்குமார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் பலத்த காயமடைந்துள்ளதால் தர்மபுரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் உயிரை காப்பாற்ற முடியாது என்று கூறியதன் காரணமாக நேற்று மாலை அங்கிருந்து தனியாருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் ரவிக்குமாரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது வரும் வழியிலேயே ரவிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் மத்தியில் பேசி புதைக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில்  ஜோலார்பேட்டை போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. ரகசியமாக வந்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

அதன் காரணமாக சாரங்கபாணியை ஜோலார்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று  விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கைது செய்து ஆம்பூர் மெஜிஸ்ட்ரேட்  முன்பு நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

மது போதையில் தந்தை மற்றும் மகன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் மகன் கட்டையால் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மேலும் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து விட்டதாக நாடகம் ஆடியது  இந்த சம்பவத்தில் நிகிழ்ந்தேறியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget