Breaking News LIVE: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து: இருவர் உயிரிழப்பு; சிக்கியிருக்கும் பலர்
Breaking News LIVE 19th Dec 2024: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

Background
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து: இருவர் உயிரிழப்பு; சிக்கியிருக்கும் பலர்
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 5 பேர் நிலக்கரிக்குள் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுப்பதாக சபாநாயகரிடம் காங்கிரஸ் புகார்
நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் ராகுல்காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுத்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர்.
அமித்ஷாவிற்கு எதிராக தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம்
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க., விசிக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 11.30 மணிக்கு தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே ஜெலட்டின் குச்சிகள் வெடித்து எரிந்த கார்கள்
ஒட்டன்சத்திரம் அருகே ஜெலட்டின் குச்சிகள் வெடித்து கார்கள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

