Indian 2: 20 வயது இளமையான கமல்... ஷங்கரின் மற்றுமொரு சாதனை... ‘இந்தியன் 2’ படத்தில் அறிமுகமாகும் டீ ஏஜிங் தொழில்நுட்பம்!
கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் பல கோடி ரூபாய் செலவில் புதிய தொழிநுட்பம் ஒன்றை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது படக்குழு!
உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு பல புதிய தொழில்நுட்பங்களை இத்தனை காலமாக தொடர்ந்து அறிமுகப்படுத்தியிருக்கிறார். தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இணைந்து மேலும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். அது என்னவென்று பார்க்கலாம்!
இந்தியன் 2
ஷங்கர் இயக்கி கமல் நடித்திருக்கும் ‘இந்தியன் 2; படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தியன் படத்தின் முதல் பாகம் கடந்த 2001 ஆம் வருடம் வெளியானது . தற்போது முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் 2ஆம் பாகம் முந்தைய பாகத்தில் இருந்த இளமையான கமலின் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது
கமலை கிட்டதட்ட 20 ஆண்டுகள் இளமையாக இந்தப் படத்தில் நாம் பார்க்கவிருப்பதாகவும், இதற்காக டீ ஏஜிங் என்று சொல்லப்படும் வயதைக் குறைக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்த ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லோலா ஸ்டுடியோஸில் இதற்கான பனிகள் நடைபெற்ற வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டின் புதிய சாதனை
A new technology incoming to Kollywood via #Indian2😎🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) July 23, 2023
Director Shankar at Lola VFX, Los Angeles to implement De-aging technology 🤩
Ulaganayagan #KamalHaasan always brings out something unique👏 pic.twitter.com/y1ESG31cac
இந்தத் தொழில்நுட்பம் பெரும் பொருட்செலவு நிறைந்தது என்பதால் பலர் இதை முயன்று பார்த்து பின் அந்த முயற்சியை கைவிட்டிருக்கிறார்கள். விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பழைய விக்ரம் திரைப்படத்தின் கமலை உருவாக்க இந்த டீ ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
ஆனால் பொருட்செலவை கருத்தில் கொண்டு இந்த முயற்சியை அவர் கைவிட்டார். தற்போது இதனை சாத்தியப்படுத்த உள்ளார் ஷங்கர். கோலிவுட்டில் முதன்முறையாக இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய பெருமை ஷங்கர் மற்றும் கமலை சேரப்போகிறது.
லால் சிங் சட்டா
இந்திய சினிமாவில் முன்னதாக இந்தத் தொழில்நுட்பத்தை அமீர் கான் நடித்த லால் சிங் சட்டா திரைப்படத்தில் பயண்படுத்தியிருந்தனர். படத்தின் கதாநாயகன் - கதாநாயகியாக நடித்த அமீர் கான் மற்றும் கரீனா கபூர் ஆகிய இருவரையும் வயது குறைந்தவர்களாக இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
இந்தியன் 2
ஷங்கர் இயக்கும் இந்தியன் இரண்டாம் பாகத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், எஸ். ஜே, சூர்யா, சித்தார்த் சமுத்திரகனி, பாபி சிம்ஹா மேலும் பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.