Eegai Movie: அஞ்சலியின் 50-வது திரைப்படம்...கைகோர்த்த பாரதிராஜா... சென்னையில் தொடங்கிய ‘ஈகை’ படப்பிடிப்பு..
தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.
![Eegai Movie: அஞ்சலியின் 50-வது திரைப்படம்...கைகோர்த்த பாரதிராஜா... சென்னையில் தொடங்கிய ‘ஈகை’ படப்பிடிப்பு.. Eegai movie starring Anjali Bharathiraji shooting begins details Eegai Movie: அஞ்சலியின் 50-வது திரைப்படம்...கைகோர்த்த பாரதிராஜா... சென்னையில் தொடங்கிய ‘ஈகை’ படப்பிடிப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/cc59ee7ea603203926c0fb7416a8e4fa1687454228014574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை அஞ்சலி நடிக்கும் ஐம்பதாவது திரைப்படமான ‘ஈகை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது
இயக்குநர் பாரதிராஜா, புஷ்பா பட வில்லன் சுனில், இளவரசு, புகழ், அறிமுக நடிகர் ஹரி, அபி நட்சத்திரா, நிஷாந்த் ரகு, கிருஷ்ண சந்தர், காஷ்யப் பார்பயா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
க்ரீன் அமூசிமெண்ட் - D3 புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழா இயக்குநர் பாரதிராஜா , தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளிதரன் முன்னிலையில் தொடங்கியது.
தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.
#eegai pic.twitter.com/Ex5GPBApoC
— Anjali (@yoursanjali) June 16, 2023
இந்நிலையில், “சஸ்பென்ஸ் நிறைந்த சமூகக் கருத்துள்ள திரைப்படமாக இப்படம் உருவாகிறது, ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும் மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்த ஈகை” என்கிறார் அறிமுக இயக்குநர் அசோக் வேலாயுதம்.
இப்படத்துக்கு தரண் குமார் இசையமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். விவேகா, அறிவு பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
முன்னதாக நடிகை அஞ்சலி பிரபல நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உடன் மலையாளத் திரைப்படமான ‘இரட்ட’ படத்தில் நடித்திருந்தார். ஆனால் தமிழில் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
இயக்குநர் ராமின் கற்றது தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை தன் துறுதுறு நடிப்பால் கவர்ந்த நடிகை அஞ்சலி, நடிக்க வந்து தற்போது 17 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்நிலையில் தற்போது தன் 50-வது படத்துக்காக கோலிவுட்டுக்கு அஞ்சலி மீண்டும் திரும்பியுள்ளார்.
மேலும் படிக்க: Regina Review: சுனைனாவின் ஆக்ஷன் அவதாரம்... சரவெடியா, சலிப்பா... எப்படி இருக்கு ரெஜினா படம்?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)