Ed sheeran Concert : மைக் வேலை செய்யல தம்பி! பெரிய பாய் இருங்க நாங்க பாடுறோம் .. எட் சீரன் நிகழ்ச்சியில் வைப் செய்த ரசிகர்கள்
Ed sheeran Concert : பிரபல ஆங்கில பாடகர் எட் சீரன் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

பிரபல ஆங்கில பாடகர் எட் சீரன் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் ஹைதரபாத், டெல்லி, புனே, சென்னை, பெங்களூரு,ஷில்லாங்க ஆகிய நகரங்களில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார், இதன் ஒரு பகுதியாக சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் எட் சீரனின் இசை நிகழ்ச்சி நேற்று (05.02.25) நடந்தது.
இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் விற்று தீர்ந்தன, இசை நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னர் இவர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானை சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார், இதனால் இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏ.ஆர் ரஹ்மான் கலந்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: VidaaMuyarchi Twitter Review: அஜித்குமாரின் விடாமுயற்சி..! பெரு வெற்றியா? வீண் முயற்சியா? - டிவிட்டர் விமர்சனம்
ஊர்வசி ரீமிக்ஸ்:
ரசிகர்கள் நினைத்தது போலவே ஏ.ஆர் ரஹ்மான் எட் சீரனின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இருவரும் சேர்ந்து எட் சீரனின் ஷேப் ஆஃப் யூ மற்றும் ரஹ்மானின் ஊர்வசி ஆகிய பாடலின் ரீமிக்ஸை பாடினர். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் ஆராவாரம் செய்தனர். ஆனால் ஏ.ஆர் ரகுமானின் மைக் மட்டும் சிறிது நேரம் வேலை செய்யாமல் இருந்தது.
Ed performing with @arrahman in Chennai 🇮🇳 pic.twitter.com/XF5To90IQR
— Ed Sheeran HQ (@edsheeran) February 5, 2025
ஆனால் இதை எதையும் பொருப்படுத்தாத ரசிகர்கள் இருவரும் பாடியதற்கு வைப் செய்தனர். இசை நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்திலேயே, எட் ஷீரன் நிகழ்ச்சியின் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார், அதில் ஏ.ஆர். ரஹ்மானை மேடையில் ஏற்றினார். “ஏ.ஆர். ரஹ்மானுக்காக நீங்கள் சத்தம் போடுவீர்களா?” என்று அவர் கத்த, பார்வையாளர்கள் பலத்த கரகோஷத்துடன் ஆரவாரம் செய்தனர்.
இதையும் படிங்க: Vidaamuyarchi Vijay Fans: ”நமக்கு எதுக்குபா வம்பு” - அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ், ஸ்லீப் மோடில் விஜய் ரசிகர்கள் - அனில் Vs ஆமை ஓவரா?
வேலை செய்யாத மைக்
இசையமைப்பாளர் தனது வழக்கமான கருப்பு நிற உடை மற்றும், சன்கிளாஸிலும் அவருடன் சேர்ந்து பாடினார்,இருப்பினும், ரஹ்மானின் மைக்கில் ஏதோ தவறு இருப்பது போல் தோன்றியது, ஏனெனில் நிகழ்ச்சியின் பெரும்பகுதிக்கு அவர் பாடியது கேட்கவில்லை. எட் ரஹ்மான் ஊர்வசியின் சில பகுதிகளைப் பாடும்போது பாடலைப் பாடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவளித்தார். ரசிகர்கள் அதைப் பொருட்படுத்தாமல் அவர்களை ஆரவாரம் செய்துக்கொண்டு அவர்களுடன் பாடினர்.
View this post on Instagram
எட் சீரன் அடுத்ததாக பெங்களூருவில் வருகிற எட்டாம் தேதி தனது இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

