Vidaamuyarchi Vijay Fans: ”நமக்கு எதுக்குபா வம்பு” - அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ், ஸ்லீப் மோடில் விஜய் ரசிகர்கள் - அணில் Vs ஆமை ஓவரா?
Vidaamuyarchi Vijay Fans: அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், விஜய் ரசிகர்களின் அமைதி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vidaamuyarchi Vijay Fans: அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படத்திற்கு, பல இடங்களில் விஜய் ரசிகர்கள் வாழ்த்து பேனர்களையும் வைத்து வருகின்றனர்.
விடாமுயற்சி ரிலீஸ்
அஜித்குமார் நாயகனாக நடித்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள, விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. த்ரிஷா, அர்ஜுன் மற்றும் ரெஜினா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். பிரேக்-டவுன் எனப்படும் ஆங்கில திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தான், அஜித் படம் வெளியாகியுள்ள சூழலில், வழக்கத்திற்கு மாறாக விஜய் ரசிகர்கள் அமைதி காத்திருப்பது தமிழ் திரையுலக வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில இடங்களில் விஜய் ரசிகர்களே, அஜித் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்து பேனர்களையும் வைத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர்.
விஜய் Vs அஜித்:
இன்றைய ட்ரெண்டில் தமிழ் சினிமாவின் உட்சநட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்று அஜித் தான். இவர்களுக்கு இடையேயான தொழில்முறை போட்டியானது, அவர்களது ரசிகர்கள் இடையே தனிப்பட்ட மோதலாகவே பிரமாண்டமாக உருவெடுத்து நிற்கிறது. இதன் விளைவாக சமூக வலைதளங்களில் மட்டுமின்றி, பொது இடங்களில் கூட அவ்வப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் சொல்லவே நா கூசும் அளவிலான ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்வது, ஒருவரது படம் வெளியாகும்போது எதிர்தரப்பு ரசிகர்கள் அதை மோசமாக விமர்சிப்பது போன்ற நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. விஜய் ரசிகர்களை அணில்கள் என்றும், அஜித் ரசிகர்களை ஆமை என்றும் விமர்சித்துக் கொள்வதும் உண்டு. அஜித் படம் ரிலீஸாகும் போது விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தால், விஜயின் அடுத்த படத்தை அஜித் ரசிகர்கள் வெச்சு செய்வது உறுதி. திரைப்படத்தின் கதை, திரைக்கதை, கிராஃபிக்ஸ், லாஜிக் மிஸ்டேக்குகள் மற்றும் வசூல் என, ஒவ்வொரு அம்சத்தையும் அலசி ஆராய்ந்து குறைகளை கண்டறிந்து ட்ரோல் செய்து படத்தின் வெற்றி, தோல்வியையே ரசிகர்கள் தான் தீர்மானிக்கின்றனர்.
அணில் Vs ஆமை சண்டை ஓவரா?
அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் சமூக வலைதள மோதல், அவ்வப்போது தேசிய அளவில் கூட ட்ரெண்டாகும். மிக மோசமான மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் என்பது மிக சாதாரணமாக முன்னெடுக்கப்படும். இந்நிலையில் தான், அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக விஜய் ரசிகர்கள் மிகவும் அமைதி காக்கின்றனர். பத்மபூஷன் அஜித் குமாரின் விடாமுயற்சி வெற்றி அடையட்டும் என ஆங்காங்கே வாழ்த்து பேனர்களையும் வைத்து வருகின்றனர். முக்கிய காரணம் விஜய் அரசியல் பக்கமும், அஜித் , கார் ரேஸ் பக்கமும் தங்களது கனவத்தை திருப்பியது தான். இருவருமே, சினிமாவை தாண்டி தங்களது அடுத்தகட்ட பயணத்தை தொடங்கியுள்ளனர். இதனை உணர்ந்து ரசிகர்களும், சினிமாவை சினிமாவாகவே இனி பார்த்தால் அநாவசியமான நேர விரயத்தை தவிர்த்து, அஜித் குறிப்பிடுவதை போன்று மற்றவரை வாழவிட்டு, தாமும் வாழலாம்.
தேர்தல் கணக்குகள்:
முதிர்ச்சித் தன்மையை தாண்டி, தேர்தல் கணக்குகளாலும் விஜய் ரசிகர்கள் அமைதி காப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை விடாமுயற்சி படத்தை கடுமையாக விமர்சித்தால், ஜனநாயகன் படத்தின் போது மட்டுமின்றி, 2026 சட்டமன்ற தேர்தலின் போதும் அஜித் ரசிகர்கள் விஜயின் தவெகவிற்கு எதிராக தீவிரமாக களமாடலாம். அது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம். இதனை கருத்தில் கொண்டே, அவர்களது ஆதரவை பெறும் நோக்கில் விஜய் ரசிகர்கள் அமைதி காப்பதோடு, விடாமுயற்சி வெற்றி பெறவும் வாழ்த்துகளை பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது.






















