Dulquer : ’எல்லா ஸ்கிரீன்ஷாட்டும் என் போன்ல இருக்கு.. ஐடிகூட நினைவில் இருக்கு’ - வெடித்துப்பேசிய துல்கர்!
தன்மீதான தனிமனித தாக்குதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.
வாரிசு நடிகர் என்றாலே விடலைப் பருவம் எட்டியவுடனேயே சினிமாவில் தலைகாட்டுவது தான் இந்தியப் பாரம்பரியமாக இருக்கிறது. ஆனால் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் தனது 26வது வயதில் தான் திரையில் பிரவேசித்தார். 2012 ஆம் ஆண்டு செகண்ட் ஷோ என்ற படம் மூலம் தான் அவர் அறிமுகமானார். இப்போது மலையாள திரையுலகில் ஒரு சூப்பர் ஸ்டார். இந்தி, தமிழ், தெலுங்கு,இந்தி என பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார் துல்கர். இவர் தற்போது இந்தியில் நடித்துள்ள சுப் திரைப்படம் வரும் 23ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தை பால்கி இயக்கியுள்ளார்.அதற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ள துல்கர் சோஷியல் மீடியா உலகம் குறித்து பேசினார்.
View this post on Instagram
இந்நிலையில் தன்மீதான தனிமனித தாக்குதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். பிரபாத் கபாருடனான நேர்காணலில் பேசிய துல்கர், '' என்னைப்பற்றி பேச வேண்டுமென்றால், நீங்கள் என்னுடைய போனை எடுத்துப்பார்த்தால் நான் நிறைய ஸ்கிரீன் ஷாட் வைத்துள்ளேன். எல்லாம் என்னை தனிமனித தாக்குதல் செய்த சோஷியல் மீடியா போஸ்டுகள்.அதனை எல்லாம் நான் சேமித்து வைத்துள்ளேன். ட்விட்டர், இன்ஸ்டா, யூடியூப் என அனைத்தையுமே நான் சேமித்து வைத்திருக்கிறேன். சில ஐடிக்களையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்றார்.
சோஷியல் மீடியா உலகம் உருவான பிறகு மற்றவர்கள் மீதான கிண்டல்கள் எல்லைமீறியே சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக செலிபிரிட்டிகள் பலரையும் சிலர் வக்கிரமாக தாக்குவதும், பாடி ஷேமிங் செய்வதும் தொடர்கதையாகி உள்ளது. நகைச்சுவை என்ற பெயரில் தொடங்கிய இதுமாதிரியான கீழ்த்தரமான கிண்டல்கள் பின்னர் வேண்டுமென்றே தனிமனித தாக்குதலாக நிகழ்த்தப்படுகின்றன. இந்த நிலையில் தன்மீதான தாக்குதல் குறித்து துல்கர் பேசியுள்ளது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மம்முட்டியுடன் துல்கர் ?
தமிழ் தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இவர் மலையாள சினிமாவின் மெஹா ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். இவரது மகன்தான் துல்கர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் இருவரையும் ஒரே திரையில் பார்க்க வேண்டும் என்பது மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசையும் கூட. இது குறித்து துல்கரிடம் கேட்டபொழுது “ எனக்கு அதுதான் ஆசை .அவருடன் ஒரு படம் எடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்; அது எந்த மொழியில் இருந்தாலும் சரி. . நான் ஏற்கனவே அவரிடம் கேட்டிருக்கிறேன், அவருடைய முடிவுக்காக நான் காத்திருக்கிறேன்.” என்றார். பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் இருக்கும் இரண்டு நடிகர்களை ஒரே திரையில் காண்பது அரிதான செயல்தான். அதிலும் முன்னணி நடிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம் . எனினும் துல்கரின் ஆசையை மம்முட்டி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில் துல்கர் சல்மான் அடுத்தடுத்து இரண்டு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்