Dulquer salman: ‛எனது கனவு நனவாகிவிட்டது..’ சீதாராமம் 50வது நாளில் துல்கர் நெகிழ்ச்சி!
இன்று சீதாராமம் திரைப்படம் தனது 50-வது நாள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றது. துல்கர் சல்மான் சீதாராமம் திரைப்படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருனால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சீதாராமம். தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. போரூற்றிய காதல் கதை என்ற கூற்றில் வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் காதல் காவியமாக கொண்டாடப்பட்டது. காதல், பிரிவு, ஏக்கம், தேசப்பற்று, இழப்பு எனப் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த படம் உருவாகி இருந்தது.
இந்நிலையில் இன்று சீதாராமம் திரைப்படம் தனது 50-வது நாள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றது. நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீதாராமம் திரைப்படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "சீதாராமம் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிய நிலையில் திரையரங்குகளில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைவிட பெரிதாக என்ன நான் கேட்கப் போகிறேன்! ஒரு கனவு நனவான தருணம் போல் இருக்கிறது. எனது படமான சுப் திரைப்படம் வெளியாகும் நாளான இன்று, சீதாராமம் திரைப்படம் 50வது நாள் கொண்டாட்டத்தை எட்டியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
நடிகர் துல்கர் சல்மான், சன்னி டியோல், ஸ்ரேயா தன்வந்திரி, பூஜா பட் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஹிந்தி திரைப்படம் 'ச்சுப் ரிவஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட்'. இது ஒரு சைக்காலஜிக்கல் மிஸ்டரி திரில்லர் திரைப்படம்.