Thalapathi 66 | ஆயுத பூஜையில் தொடங்கும் விஜய்யின் ’தளபதி 66’ ? வெளியான புதிய தகவல்!
தளபதி விஜய் தெலுங்கில் தமிழ்-தெலுங்கு இருமொழியுடன் தில் ராஜு தயாரித்து 'மகரிஷி' புகழ் வம்சிபைடிப்பள்ளி இயக்கத்தில் அறிமுகமாகிறார் என சினிமா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
’யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல் நடிகர் விஜயின் படங்கள் வெளியாவதற்கு முன் பல கணிப்பு தகவல்கள் ரிலீஸ் ஆகிவிடும். தளபதி விஜயின் ஒவ்வொரு நகர்வையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். இந்நிலையில் விஜய் அடுத்த படம் என சொல்லப்படும் ’தளபதி 66’ படம் ஆயுத பூஜையில் இருந்து துவங்கலாம் என சொல்லப்படுவது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தளபதி விஜய் தெலுங்கில் தமிழ்-தெலுங்கு இருமொழியுடன் தில் ராஜு தயாரித்து 'மகரிஷி' புகழ் வம்சிபைடிப்பள்ளி இயக்கத்தில் அறிமுகமாகிறார் என சினிமா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 'தளபதி 66' என்று படம் அக்டோபரில் தொடங்கப்படும் என்றாலும், பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2022 முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது மற்றும் 2022 தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கிசு, கிசுக்கின்றனர்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளர். வெள்ளை நிற உடை அணிந்து விஜய் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் விதமாக வெளியான பீஸ்டின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. தளபதி 65 படத்தில் தளபதி விஜய் ஒரு புதிய அவதாரத்தில் காணப்படுவார் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர் .
மேலும் ஏ.பி.பி நாடு செய்தித்தளத்தில் சினிமா செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Dhanush : தொடரும் Rolls royce பஞ்சாயத்துகள்... நீதிமன்ற விமர்சனத்தில் இருந்து தப்புவாரா தனுஷ்?
மேலும் இந்த படம் அதிரடி, காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்யுடன் ஜோடியாக நடிக்கிறார் , மேலும் இந்த அழகான நடிகை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். யோகி பாபு, அபர்ணா தாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!