‛ஐந்து வேளை தொழுகிறீர்களா?’ - ரசிகர் கேள்விக்கு ஃபரினா ஆசாத் பதில்...!
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்துக்கொண்டிருக்கும் ஃபரீனா ஆசாத்திடம் தான் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
டிவி சீரியல்களில் ஒவ்வொரு காலதித்திலும் ஒவ்வொரு கதை பிரபலாமாக இருக்கும். அப்படி ஒரு கண்டெண்ட் ஹிட் ஆகி விட்டால் அதை பல தொலைக்காட்சிகளில் பட்டி டிங்கிரிங் பார்த்து வேறு சீரியலாக மாற்றி போடுவது உண்டு. அப்படி கண்டெண்ட்டை ஹிட் ஆக்குவதற்காக பல புதிய முயற்சிகளை பல சேனல்கள் போட்டி போட்டு செய்கின்றனர். அப்படி பல நாட்களாக பலரின் கவனத்தையும் ஈர்த்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’. பொதுவாக ஒரு சீரியல் என்றால் வயதானவர்கள் அதிகம் பார்ப்பார்கள், அல்லது காதல் சீரியல்கள் என்றால் இளைஞர் பட்டாளம் பார்க்கும். இந்த சீரியலில் தனித்தன்மையே இரண்டு வகையானோரும் சரி சமமாக பார்ப்பதுதான். அதிலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் எபிசோடுகள் அனைத்தும் பரபரப்போடு உள்ளதால் டிஆர்பியில் முதல் இடத்தில உள்ளது. இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இதில் தோன்றும் காதாபாத்திரங்கள் பற்றி சொல்ல தேவையில்லை. குறிப்பாக வில்லியாக வரும் வெண்பா குறித்து அனைவரும் அறிவர். அந்த அளவிற்கு வில்லத்தனம் கொண்ட பாத்திரம் அது.
சீரியல் பார்ப்பவர்களின் குமுறலையும், திட்டையும் வாங்கும் இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய இவரை தற்போது திட்டுவதை ரசிகர்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர். ஏனென்றால், இவர் இந்த சீரியலில் வில்லி வேடத்தில் நடிக்கும் போதுதான் இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி வந்தது. தன்னை இத்தனை நாள் திட்டியவர்கள் இப்போது வாழ்த்துகிறார்களே என அவரே ஒரு முறை எமோஷ்னல் ஆகி இருந்தார்.
ஃபரீனா கர்ப்பமான பிறகு விதவிதமான போட்டோ ஷுட்டுகள் நடத்தி வருகிறார். இவர் வெளியிடும் சில புகைப்படங்கள் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலான நிலையில், அதற்கு அவரது ரசிகர்களுள் சிலர் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் சிலரோ தங்கள் மோசமான கமெண்டுகளை பதிவிட்டிருந்தனர். தொடர்ந்து அவர் நடத்திய பல போட்டோஷூட்களுக்கு இதே போன்ற கலவையான விமர்சனங்களை பெற்றார்.
குறிப்பாக தண்ணீருக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோஷூட்க்கு கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதேபோல் கர்ப்பமான வயிற்றில் மருதாணி வைத்து வித்யாசமாக எடுக்கப்பட்ட போட்டோஷூட்க்கு ரசிகர்கள் திட்டி தீர்த்தனர். ஆனால், இதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாத ஃபரீனா, தொடர்ந்து தனது கர்ப்பகால போட்டோ ஷூட்டை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ரசிகர்களுடன் அவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் கலந்துரையாடிய போது ஒருவர், ‘வயிற்றை காட்டி போட்டோ ஷுட் நடத்த வேண்டாம்’ என்று கூறினார். இதற்கு அவர், ‘நம்மை சுற்றி நல்ல உள்ளங்களும், நல்ல எண்ணமும் இருந்தால் எப்போதும் ஒன்றும் ஆகாது’ என்று கூறியுள்ளார். மேலும், மற்றொருவர் ‘ஒரு நாளைக்கு 5 முறை தொழுகுரீங்களா ?’ என்று கேட்டற்கு, நான் தினமும் யோகா செய்வேன் என்று கூறியுள்ளார்.