Disney's Hotstar: அடுத்த ஆப்பு, நெட்ஃபிளிக்ஸ் பாணியில் டிஸ்னி+ ஹாட் ஸ்டார்.. பயனாளர்களுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு?
ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் பாணியில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியிலும், பயனாளிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் பாணியில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியிலும், பயனாளிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணக்கை பகிர கட்டுப்பாடு?
இந்தியாவில் ஸ்டிரீமிங் சேவை வழங்கி வரும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில், அதன் பிரீமியம் பயனர்கள் நான்கு சாதனங்களில் இருந்து மட்டுமே உள்நுழைய அனுமதிக்கும் புதிய கட்டுப்பாடு விதிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஸ்ட்ரீமிங் சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனத்தின், கடவுச்சொல் பகிர்வைக் கட்டுப்படுத்தும் இந்த முயற்சி அந்த செயலியின் பயனாளர்களிடியே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவுள்ள மாற்றம்:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்கள் அதிகபட்சம் 4 சாதனங்களில் மட்டுமே லாக் - இன் செய்ய முடியும் என அதன் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், தற்போது வரை இந்தியாவில் பிரீமியம் சந்தாதாரர்கள் 10 சாதனங்களில் லாக்-இன் செய்ய முடிகிறது. இந்நிலையில் தான், பிரீமியம் சந்தாதாரர்களுக்கான அனுமதியை மட்டுப்படுத்தும் முயற்சியை,டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் சோதித்து பார்த்துள்ளது. மற்றும் அத்தகைய கணக்குகளுக்கான உள்நுழைவுகளை நான்காக கட்டுப்படுத்தி இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயனாளர்கள் புதிய கட்டுப்பாடுகளுடன் தங்கள் சொந்த சந்தாக்களை வாங்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
நெட்ஃபிளிக்ஸ் பாணியில் கட்டணம்?
ஸ்ட்ரீமிங் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடந்த மே மாதத்தில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய கட்டுப்பாடை அமல்படுத்தியது. அதன்படி, சந்தாதாரர்கள் தங்களது குடும்ப நபர்களை தவிர்த்து பிறருடன் கணக்கை பகிரிந்து கொள்ள கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த பாணியில் தான் டிஸ்னியின் புதிய திட்டமும் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது . இதுதொடர்பான கேள்விக்கு வால்ட் டிஸ்னி நிறுவனம் தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிட மறுத்துள்ளது.
இந்தியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்:
இந்தியாவில் 5 கோடி பயனாளர்களை கொண்டு ஸ்ட்ரீமிங் சேவையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. ஜனவரி 2022 முதல் மார்ச் 2023 வரை இந்தியாவின் ஒடிடி தள வியூவர்ஷிப்பில் 38 சதவிகிதத்தை கொண்டு தன்னகத்தே கொண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதேநேரம், போட்டி நிறுவனங்களான நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பிரைம் ஆகியவை தலா 5 சதவிகிதம் மட்டுமே கொண்டுள்ளது. இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து பிரீமியம் சந்தாதாரர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டாம் என, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் கருதுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இந்தியாவில் 2027ம் ஆண்டிற்கு ஒடிடியின் சந்தை மதிப்பிலான 7 பில்லியம் அமெரிக்க டாலர்களை எட்டும் என சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.