மதுரையில் விஜய் படத்தை பயந்து பயந்து ரிலீஸ் செய்த இயக்குநர்! அப்படி என்ன ஆச்சு?
மதுரையில் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தை மதுரையில் முதன் முதலில் பயந்து பயந்து ரிலீஸ் செய்ததாக அப்படத்தின் இயக்குநர் விக்ரமன் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

மதுரையில் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தை மதுரையில் முதன் முதலில் பயந்து பயந்து ரிலீஸ் செய்ததாக அப்படத்தின் இயக்குநர் விக்ரமன் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். இதன் பின்னால் ஒரு காரணமும் உண்டு. அது என்ன என்பது குறித்து அவர் சொல்லியிருப்பதை பார்க்கலாம்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான படம் பூவே உனக்காக. நடிகையாக சங்கீதா நடித்திருந்தார்.
விஜய்யின் திரைவாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக இந்தப்படம் அமைந்தது என்றால் மிகையல்ல. இப்படத்தில் சார்லி, நம்பியார், நாகேஸ், மலேசியா வாசுதேவன், டெல்லி கணேஷ், அஞ்சு அரவிந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
மேலும், நடிகர் முரளி இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடியிருந்தார்.
விஜய்யின் வெற்றிப்படமான இப்படம் ரிலீஸ் செய்யும் போது பல்வேறு சவால்களை சந்தித்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “பூவே உனக்காக படத்தை சௌத்ரி சார்தான் தயாரித்தார். அப்படத்தை சந்தோசமாக ஆரம்பித்து சந்தோசமாக முடிய வேண்டும் என விரும்பினார். நானும் அப்படித்தான் எடுத்தேன். விஜய்யும் சங்கீதாவும் சேர்வது போன்று எடுத்து மொத்த குடும்பமும் ஆனந்தம் ஆனந்தம் பாடல் பாடுவது போன்று எடுத்தேன்.
ஆனால் இப்போது இருக்கும் க்ளைமேக்ஸ்தான் எனக்கு பிடித்த க்ளைமேக்ஸ். எனது மனது நெருக்கமானதும் கூட. கதை யோசிக்கும்போதே இப்போது இருக்கும் க்ளைமேக்ஸை வைத்துதான் யோசித்தேன். சௌத்ரி சாரை கன்வீனியன்ஸ் பண்ணி, சூட் பண்ணி, ரீ ரெக்கார்டிங் பண்ணி, படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்தேன். அது இன்னைக்கு வரைக்கும் பேசப்பட்டு வருகிறது.
சௌத்ரி சார் ஹேப்பி எண்டிங்காவே இருக்கட்டும் என கம்பெல் பண்ணார். நான் அதையும் பண்ணி, இப்போ இருக்கும் க்ளைமேக்ஸையும் தயார் செய்து வைத்தேன்.
இசைக்கலைஞர்கள் எல்லாம் இப்பொது இருக்கும் க்ளைமேக்ஸைத்தான் சூப்பர் என்று சொன்னார்கள். முதலில் ஹேப்பி க்ளைமேக்ஸ் பார்த்தார் சௌத்ரி. அது பிடித்திருந்தது அவருக்கு. ரெண்டாவது என்னுடைய க்ளைமேக்ஸ் காப்பியை பார்க்க சொன்னேன். அதை வீட்டில் வைத்து பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு போய் விட்டார்.
அப்புறம் போய்ட்டு பேசினேன் அவரிகிட்ட. எனக்காத்தான் இந்த படத்தை எடுத்தீர்கள். இதுதான் என் நம்பிக்கை. புதிய மன்னர்கள் ஓடல. இந்த படமும் ஓடவில்லை என்றால் எனக்கு படமே வராது. என்னை நம்புங்க. புது வசந்தம் மாதிரி இதையும் நம்புங்க. சூப்பர் ஹிட் ஆகும்.
முக்தா தியேட்டரில் தெரிந்தவர்களை வைத்து மட்டும் ஒரு ஷோ ரெடி செய்வோம். பார்ப்போம் என சொன்னார். அதேபோல் தயார் செய்தோம். ஆனால் சில விநியோகஸ்தர்கள் தகவல் தெரிந்து வந்துவிட்டார்கள். எல்லாரும் பயங்கரமாக என்ஜாய் பன்றாங்க. க்ளைமேக்ஸ்க்கு வெயிட் பண்ணுனோம்.
வெளியில் நின்று பார்க்கிறோம். எல்லோரும் கண்கலங்கிதான் வெளியே வருகிறார்கள். எல்லோரும் பாராட்டினார்கள். அடுத்தநாள் வியாக்கிழமை. ஆனால் வெள்ளிக்கிழமைதான் படம் ரிலீஸ் செய்வோம். மதுரையில் ஒரு பிரச்சினை. சினிப்பிரியா காம்ப்ளக்ஸில் வியாழக்கிழமைதான் தியேட்டர் கிடைத்தது. வெள்ளிக்கிழமை ராமராஜன் படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. பிறகு மதுரை தியேட்டர் ஓனர் முன்னதாக ஒருநாள் ரிலீஸ் செய்து கொள்கிறேன் என பிடிவாதம் பிடித்து வாங்கினார்.
சௌத்ரி சாரும் யோசித்தார். ஒரே ஒரு தியேட்டரில் ரிலீசாகி கொஞ்சம் தவறாகிவிட்டாலும் யாரும் வாங்கமாட்டார்கள். படம் ரிலீஸாகாது. நான் தான் விட்டு பார்ப்போம் என்று சொன்னேன். பயந்து பயந்து ரிலீஸ் செய்தோம். விமானத்தில் பிரிண்ட் எடுத்துக்கொண்டு போய்விட்டார். மதியம் படம் முடிந்து ரிப்போர்ட் வந்துவிட்டது. படம் சூப்பராக இருக்குன்னு சொன்னதாக போன் வந்தது.
மதுரையில் படம் ஹிட் என்றால் உலகம் முழுவதும் ஹிட் ஆகும். எல்லாவிதமான படத்தையும் ரசிப்பார்கள். படத்தை நன்றாக பாராட்டினார்கள். உலகக்கோப்பை அப்போது இந்தியாவில் நடைபெற்றது. அது எங்களுக்கு கொஞ்சம் நெகட்டிவ்.
கோயம்புத்தூர், சென்னை, மதுரை ஆகிய மூன்று ஊர்களில் 270 நாட்கள் ஓடியது. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு வருடம் ஓட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. தீபாவளி வரவும் அந்த படத்தை தூக்கினார்கள். இல்லையென்றால் ஒரு வருடம் ஓடியிருக்கும்” எனத் தெரிவித்தார்.





















