சூர்யாவை நினைச்சா பெருமையா இருக்கு.. எனக்கு 10 விருது கிடைச்சிருக்கு.. - இயக்குநர் வசந்த் நெகிழ்ச்சி..!
சூர்யாவிற்கு கிடைத்த விருதை தனக்கு கிடைத்து விருதாக கருதுவதாக இயக்குநர் வசந்த் பேசியுள்ளார்.
சூர்யாவிற்கு கிடைத்த விருதை தனக்கு கிடைத்து விருதாக கருதுவதாக இயக்குநர் வசந்த் பேசியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் வசந்த் கூறும் போது, “ சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. அனைவரும் பாராட்டி வருகின்றனர். உண்மையில் எனக்கு 10 விருதுகள் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். என்னைப்பொருத்தவரை சூர்யாவிற்கு கிடைத்த விருதை எனக்கு கிடைத்த விருதாக கருதுகிறேன்.
அவ்வளவு மகிழ்ச்சி.
சூர்யாவை அறிமுகப்படுத்தியதில் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. மண்டேலா படத்திற்கும் விருதுகள் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவிற்கு 10 விருதுகள் கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெண்களின் வலியை பேசிய எனது படத்திற்கு விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த விருதை எழுத்தாளர்கள் ஆதவன், அசோகமித்திரன், ஜெயமோகன் ஆகியோருக்கு சமர்பிக்கிறேன். மேலும் எனது குருநாதர் பாலசந்தர், குடும்பத்தாருக்கும் இந்த விருதை சமர்பிக்கிறேன்” என்று பேசியுள்ளார்.
விருது விபரம்
சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் ( சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)
சிறந்த தமிழ் படம் - சிவரஞ்சனியும் சில பெண்களும் ( இயக்கம் : இயக்குனர் வசந்த்)
சிறந்த துணை நடிகை - லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் சில பெண்களும்)
பிற படங்கள் பெற்ற விருது விபரங்கள்
68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழில் வெளியான திரைப்படங்கள் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது. குறிப்பாக, இயக்குநர் சுதாகொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது, சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது சிறந்த பின்னணி இசைக்கான விருது சிறந்த திரைக்கதைக்கான விருது என 5 விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, சுதா கொங்கரா கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.
சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
சிறந்த அறிமுக இயக்குநர் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்தியாவில் திரைப்படம் எடுக்க உகந்த நகரமாக மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ‛சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ அன்றே கணித்து பாராட்டிய நடிகர் சூர்யா!
மேலும் படிக்க : Mandela Movie Awards: மண்டேலா திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநர் விருதுபெறும் மடோன் அஷ்வின்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்