Aditi Shankar: மலையாள ரீமேக் படம்.. ஸ்டைலிஷ் இயக்குநருடன் கைகோக்கும் ஷங்கரின் மகள்..!? ஹாட் அப்டேட்..!
ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜென்டில் மேன்’ ‘இந்தியன்’ ‘முதல்வன்’ ‘எந்திரன்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஷங்கர். இவரது மகள் அதிதி ஷங்கர். மருத்துவரான இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விருமன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
View this post on Instagram
சூர்யா ஜோதிகா இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் அதிதி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
View this post on Instagram
இந்த நிலையில் இவர் பிரபல இயக்குநரான கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற கப்பெல்லா படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும், இந்தப்படத்தில் ‘அன்னா பென்’ நடித்த கதாபாத்திரத்தில் நடிகை அதிதி நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக, தெலுங்கில் வெளியான கானி படத்தில் இடம்பெற்ற ரோமியோ ஜூலியட் பாடலை அதிதி பாடியது குறிப்பிடத்தக்கது.