Selvaraghavan Dhanush Combo: தனுஷ் படம் பற்றி செல்வராகவன் கொடுத்த ஸ்ட்ராங் ஸ்டேட்மெண்ட்..!
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட் குறித்து இயக்குநர் செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான அப்டேட் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என்று இவர் இயக்கிய படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் கடைசியாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை உருவாக்கியிருந்தார்.
செல்வராகவனின் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகம் படத்திலும் தனுஷ் நடிப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அதற்குள் தனுஷை வைத்து இயக்குனர் செல்வராகவன் நானே வருவேன் என்ற படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதற்கான போஸ்டரும் வெளியானது.
ஆனால், சில காரணங்களால் படத்தின் தலைப்பை மாற்ற தயாரிப்பாளர் தாணு, செல்வராகவனிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தலைப்பு மட்டுமின்றி கதைக்களத்திலும் பல மாற்றங்களுடன் ராயன் என்ற தலைப்பில் அந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், செல்வராகவன் சாணிக்காயிதம், விஜய் நடிக்கும் பீஸ்ட் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதால் தனுஷ் – செல்வராகவன் படத்தின் கூட்டணி எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். மேலும், இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள் மூலமாகவும் செல்வராகவனுக்கு கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை செல்வராகவன் பகிர்ந்துள்ளார். கருப்பு மற்றும் வெள்ளை நிற புகைப்படமான அந்த படத்தின் கீழ் நானே வருவேன் என்றும் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விரைவில் தனுஷ் மற்றும் செல்வராகவனின் கூட்டணியின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வராகவனின் சகோதரர் தனுஷ். செல்வராகவனின் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகரான தனுஷ், தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் இதுவரை துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்திலும், நரேன் கார்த்திக் இயக்கத்தில் மாறன் என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் ஏற்கனவே துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Cooku with Comali | சன்னி லியோன் நடிக்கும் தமிழ்ப்படத்தில் எண்ட்ரி கொடுக்கும் 'குக் வித் கோமாளி' ஸ்டார்..!