விஜய் விவாகரத்து: அண்ணாமலை பரபரப்பு பதில்! அரசியல் சூழ்ச்சியா? மக்கள் தீர்ப்பா?
அரசியலுக்கு வந்ததும், உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டி எடுப்பார்கள். இது அனைத்து தலைவர்களுக்கும் இருந்ததுதான். அது விஜய் அவர்களுக்கும் இருக்கிறது - அண்ணாமலை

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும், தவெக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துகோரி அவரின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலிலும், தமிழ் சினிமாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விஜயின் விவகாரம் தொடர்பாக கருத்து கூறவிரும்பவில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
விஜயின் விவகாரத்தை அரசியல்படுத்த விரும்பவில்லை
“தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா கடந்த டிசம்பர் மாதம் விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்றைக்கு அது வெளியே வந்திருக்கிறது. இந்த விஷயத்தில் மூன்று பேருக்கு மட்டுமே தொடர்பு இருக்கிறது என்று நான் பார்க்கிறேன். அது, விஜய், அவரின் மனைவி, நீதிமன்றம் மட்டுமே. அதுவும் ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கை என்று பார்க்கிறேன். விஜயின் அரசியல் கருத்துக்கு பதில் சொல்ல நான் தயாராக இருக்கின்றேன். இந்த விஷயத்தில் அரசியல் ரீதியாக நான் கருத்து கூற விரும்பவில்லை. விஜயின் விவாகரத்தில் அரசியல்படுத்த விரும்பவில்லை.
விஜயை மக்கள் ஏற்பார்களா?
அரசியலுக்குள்ளே வந்துவிட்டால் தீப்பந்தத்திற்குள் சென்று வெளியே வந்த மாதிரிதான். அரசியலுக்கு வந்ததும், உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டி எடுப்பார்கள். இது அனைத்து தலைவர்களுக்கும் இருந்ததுதான். அது விஜய் அவர்களுக்கும் இருக்கிறது. விஜய் அரசியல் வரும்போது இதையெல்லாம் உணர்ந்துதான் வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இதை அவர் கடந்துதான் போகவேண்டும். இதை கடந்துதான் அவருடைய அரசியல் இருக்கிறது. இதை எல்லாம் பார்த்துதான் விஜயை மக்கள் ஏற்பார்களா? இல்லையா? என்று வரும் சட்டமன்ற தேர்தலில் தெரியவரும்.
என்னுடைய அரசியல் அது அல்ல
அரசியலில் எம்ஜிஆருக்கும் அவரின் தொடக்க காலத்தில் சில பிரச்னைகள் இருந்தது. விஜய் இதற்கான விலையை கொடுக்க வேண்டும். இதற்கான நியாய, தர்மத்தை தாண்டி விஜய் பயணம் செய்ய வேண்டும். விஜயின் விவகாரத்தில் அநாகரீகமாக கருத்து சொல்லவிரும்பவில்லை. என்னுடைய அரசியல் அது அல்ல” என்று அண்ணாமலை கூறினார்.
விஜய் - சங்கீதா விவாகரத்து அண்ணாமலை ADVICEhttps://t.co/wupaoCzH82 | #vijay #annamalai #tvk #bjp #tnassemblyelection2026 #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு pic.twitter.com/FLC4hGGMqL
— ABP Nadu (@abpnadu) February 28, 2026























