ஜெயிலர் 2 படத்தில் இணையும் பாலையா ? கன்வின்ஸ் செய்வாரா நெல்சன்?
ஜெயிலர் முதல் பாகத்தில் மோகன்லால் , ஷிவராஜ்குமார் நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் பாலையா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து அவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இதன் அறிவிப்பை சமீபத்தில் சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டது. நெல்சன் ஸ்டைலில் காமெடி கலந்த ஆக்ஷன் ப்ரோமோவாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. முந்தைய பாகத்தைப் போலவே இந்த பாகமும் முழுக்க முழுக்க ரஜினியின் மாஸை கொண்டாடும் விதமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜெயிலர் 2 படத்தில் பாலையா
ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் ஷிவராஜ்குமார் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்கள். பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் இவர்களின் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியான ஒரு மாஸ் கொடுத்திருந்தார் நெல்சன். தற்போது ஜெயிலர் 2 படத்திற்கு மூத்த தெலுங்கு நடிகர் பாலையாவை நடிக்க வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜெயிலர் முதல் பாகத்திற்கே பாலையாவை கேட்டு அவர் நடிக்க மறுத்துவிட்ட நிலையில் தற்போது இந்த முறை பாலையாவை நெல்சன் கன்வின்ஸ் செய்வாரா என்கிற கேள்வி உள்ளது. பாலையா நடித்துள்ள டாக்கு மகாராஜ் படம் பெரியளவில் வரவேற்பைப் பெற்று தற்போது தமிழிலும் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழில் வெளியாவதை நெல்சன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனடிப்படையில் ஜெயிலர் 2 படத்தில் பாலையா நடிப்பதாக ரசிகர்கள் உறுதிசெய்துள்ளார்கள்.
#DaakuMaharaaj is releasing in Tamil from tomorrow. Starring beloved #NandamuriBalakrishna sir 🔥🔥
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) January 16, 2025
Wishing the movie continued success, just like its Telugu run! All the best team dear friends @KVijayKartik @dirbobby @vamsi84 @MusicThaman @thedeol
Here is the Telugu version…
கூலி
ரஜினியின் கூலி படத்தில் சத்யராஜ் , உபேந்திரா , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் , நாகர்ஜூனா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயிலர் , கூலி , ஜெயிலர் 2 என அடுத்தடுத்து ரஜினியின் படங்களை தயாரித்து வருகிறது சன் பிக்ச்சர்ஸ்.

