அஜித்தின் அடுத்தடுத்து ரேஸ்கள்..இதோ லிஸ்ட்!
நடிகர் அஜித் சமீபத்தில் நடந்த துபாய் ரேஸில் தன் அணியுடன் கலந்து கொண்டார்.
அவர்களின் அணி Porsche 911 GT3 பிரிவில் 3-வது இடம் பிடத்து சாதித்தனர்.
தற்போது அஜித் அடுத்து கலந்து கொள்ளும் பந்தயங்கள் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
மார்ச் 22-23 ஆகிய தேதிகளில் இத்தாலின் Mugello-வில் நடக்கவிருக்கும் ரேஸில் பங்கேற்கிறார்.
அதை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் பெல்ஜியம் நாட்டில் நடக்கவிருக்கும் Spa-Francorchamps ரேஸில் பங்கேற்கிறார்.
துபாய் ரேஸில், அஜித் ரசிகர்கள் பலர் பார்வையாளராக சென்றிருந்தனர்.
அடுத்த நடக்கவிருக்கும் ரேஸிலும் அஜித் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் கருத்துக்களை கூறுகின்றனர்.