Director Hari: சாமி படம் அப்போ பயம்.. வடிவேலுக்கு எழுதுன அந்த சீன்.. நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் ஹரி!
பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இயக்குநர் ஹரி பேசியுள்ளார்.
![Director Hari: சாமி படம் அப்போ பயம்.. வடிவேலுக்கு எழுதுன அந்த சீன்.. நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் ஹரி! Director Hari opens up about saami movie and vadivelu comedy scene Director Hari: சாமி படம் அப்போ பயம்.. வடிவேலுக்கு எழுதுன அந்த சீன்.. நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் ஹரி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/04/e14a30e8f9ffd47708a003e9ca93f6021656935473_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உயர்ந்து வரும் நடிகர் அருண் விஜய் முதன்முதலாக தனது அக்கா கணவரான இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடித்துள்ள படம் “யானை”. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, போஸ் வெங்கட், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் முதலில் இந்த படம் மே 6 ஆம் தேதியும்,பின் ஜூன் 17 ஆம் தேதி ரிலீசாவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஹரி மிகைண்ட்வுட்ஸ்க்கு பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
View this post on Instagram
ஹரி படம்னாலே அரிவாள், டாடா சுமோதான்.. அதப்பத்தி சொல்லுங்க?
அந்தக்காலத்துல சென்னையில கார் கம்மி. இன்னைக்கு அப்படியெல்ல, எல்லாருடைய வீட்லயும் கார் இருக்கு. ஒரு பிராண்ட்னு இல்லை. எந்த பிராண்டா இருந்தா என்ன? ரவுடி குரூப்னா டாடா சுமோ, போலீஸ் குரூப்னா பொலிரோ. அவ்ளோதான்.
சாமி படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியடைஞ்சது. அந்தப்படம் ரிலீஸ் அப்ப எப்படி இருந்துச்சு?
அய்யோ என்ற அதிர்ச்சி இல்லை. பயம் இருந்துச்சு. கமெர்ஷியல் படம் பண்ணோம். நார்மலா போகும்னு நினைச்சோம். அதைத்தாண்டி இன்னும் பெட்டரா போச்சு. இனி இன்னமும் உஷாரா படம் பண்ணனும். அந்தப்படம் ரிலீசாக பிறகுதான் கோவில் படத்துக்கு ப்ளான் பண்ணுனேன். அடுத்து சின்னப்படம் பண்ணனும்னு தோணுச்சு. முதல்படம் தமிழ் நடுத்தர படம், ரெண்டாவது படமான சாமி ப்ளாக் பஸ்டர், அடுத்தடுத்து மேல மேலபோய் எவரெஸ்ட் மேல போய்ட்டா அப்றம் நேரடியா ரெக்கை கட்டி பறக்க வேண்டிதான்.
படத்தோட டயலாக்லாம் எப்படி புடிக்கிறீங்க?
அதாவது டிஸ்கஷனப்போ ஒரு மூடும், ஷூட்டிங் அப்போ ஒரு மூடும் இருக்கும். வடிவேலு அண்ணன்கிட்ட எல்லாம் நான் அவரு கேரக்டராவே மாறிடுவேன். வடிவேலு காமெடி அப்போலாம் அப்படியே டோட்டலா மெர்ஜ் ஆகிடுவேன்.
வடிவேலுக்கு ரொம்ப ரசிச்சு எழுதுண காமெடி சீன் எது?
வேல் படத்துல கடைய கொளுத்துற சீன். அது ஷூட்டிங் அப்போ காக்கா எச்சம் போச்சு அத வச்சி பிடிச்சு எழுதுன காமெடி அது. காக்கா எச்சம் போன இடத்துல வடிவேலு இருந்தா எப்படி மாறும்னு தோனுச்சு அப்படியே காமெடியா பண்ணோம். அதுல மிஸ்ஸான சீன்லாம் இருக்கு என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)