மேலும் அறிய

HBD Gautham Menon: மாஸ்..கிளாஸ்..ரொமான்ஸ் - கௌதம் மேனன் பிறந்தநாள் இன்று!

இயக்குநர் கெளதம் மேனன் இன்று தனது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

கெளதம் வாசுதேவ் மேனன்

மின்னலே படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் வாசுதேவ் மேனன், தொடர்ந்து  காக்க காக்க, பச்சைக் கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உள்ளிட்டப் படங்களின் வழியாக தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லும் பாணியை உருவாக்கினார். இன்று தனது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் கெளதம் மேனன். 

தான் இந்த உலகத்தை , உறவை, பெண்களைப் பார்க்கும் விதத்தை தனது படங்களில் பிரதிபலிக்கக் கூடிய ஒரு இயக்குநர் கெளதம் மேனன். அப்படி அவரது படங்களில் தனித்துவமான சில விஷயங்களைப் பார்க்கலாம்.

மிடில் கிளாஸ் இளைஞர்களின் காதல்

மிடில் கிளாஸ் என்று நாம் சொல்லும் மத்திய தர வர்கத்தைச் சேர்ந்தவர்களை மையமாக வைத்து எக்கசக்கமான படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் பெரும்பாலான படங்கள் அந்த வாழ்க்கையில் இருக்கும் சலிப்பையும் சவால்களையும் தான் படங்களில் சித்தரித்திருக்கின்றன. ஒரு மிடில் கிளாஸ் வீட்டைச் சேர்ந்தவனின் காதல் , அவனது உலகத்தில் இருக்கும் அழகியல் இதை எல்லாம் தேர்ந்த திரைமொழியில் படமாக்கியவர்கள் மிக குறைவு. மின்னலே, வாரணம் ஆயிரம், நீதான் என் பொன்வசந்தம் , போன்ற படங்களில் மிடில் கிளாஸ் இளைஞர்களின் காதலை காட்டியதற்காக கெளதம் மேனனுக்கு ரசிகர்களிடம் எப்போது ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கிறது.

பெண்கள்

அதே நேரத்தில் வேட்டையாடு விளையாடு , என்னை அறிந்தால் போன்ற படங்களில் விவாகரத்துப் பெற்ற பெண்களை அவர் பாசிட்டிவாக சித்தரித்த விதமும் பாராட்டிற்குரியது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் காதல் குடும்பம் என இரண்டு நிலைகளுக்கு இடையில் தத்தளிக்கும் பெண்ணின் மனநிலையை மிக துல்லியமாக பிரதிபலித்திருப்பார்.

 ஒரு மனிதனின் முழு வாழ்க்கையை ஒரு படத்தில் சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஹாலிவுட்டில் இப்படியான படங்கள் நிறைய வந்திருந்தாலும் தமிழில் இப்படியான படங்கள் குறைவே. வாரணம் ஆயிரம் படம் வெறும் ஒரு ரொமாண்டிக் டிராமாவாக இல்லாமல் ஒரு தனி நபவரின் பிறப்பில் தொடங்கி அவனது வாழ்க்கையை ஒரு சுழற்சியாக படமாக காட்டியது.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து கதைகளை படமாக்குவது என்பது ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு படைப்பாளியை தேங்க வைத்து விடுவது. தனது மிகப்பெரிய பலமாக இருந்த வாய்ஸ் ஓவர், எதார்த்தமான வசனங்களையே தனது மிகப்பெரிய பலவீனமாகவும் மாற்றிக் கொண்டார் கெளதம் மேனன். ரசிகர்கள் கொண்டாடிய கெளதம் மேனன் திருப்பி திருப்பி அவர் ஒரே கதையை மாற்றி மாற்றி எடுப்பதாக உணர்ந்தது இதனால் தான். என்னை நோக்கி பாயும் தோட்டா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் அவர் ஏற்கனவே ரசிகர்கள்  மனதளவில் கடந்தவிட்ட படங்கள்.

இந்த தேக்க நிலையை அடையாளம் கண்டு ஒரு படைப்பாளி தனது கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியேறுவது அவசியம், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் கெளதம் மேனன் முயற்சித்தது இதை தான். அடுத்தடுத்து துருவ நட்சத்திரத்துடன் , ஜோஷுவா உள்ளிட்டப் படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த வருடம் கெளதம் மேனன்னுக்கு ஒரு சிறப்பான வருடமாக அமைய வாழ்த்துக்கள். 

மேலும் படிக்க : Manjummel Boys Review: குணா குகையில் நடந்த உண்மை சம்பவம்.. மஞ்சும்மல் பாய்ஸ் பட விமர்சனம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
Embed widget