Kavin: ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்த கவின்.. வெளிப்படையாக போட்டுடைத்த ஸ்டார் இயக்குநர் இளன்!
கவினுக்கு இந்த படம் ரொம்ப நெருக்கமான ஒன்றாகும். நான் கதை சொல்லி முடித்ததும் இதில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் என் வாழ்க்கையிலும் நடந்திருக்குது என சொன்னார்.
ஸ்டார் படத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வு ஒன்று கவின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் என இயக்குநர் இளன் தெரிவித்துள்ளார்.
பியார் பிரேம காதல் படத்தை தொடந்து இயக்குநர் இளம் இயக்கியுள்ள படம் “ஸ்டார்”. முதலில் இந்த படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருந்த நிலையில், அவருக்கு பதில் பின்னர் கவின் நடித்தார். மேலும் லால், அதிதி போங்ஹர், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த ஸ்டார் படம் மே 10 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.
இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே வியந்து பாராட்டும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. சினிமாவில் ஹீரோவாக விரும்பும் இளைஞனின் ஆசை, நிராகரிப்பு, வலி, முயற்சி என பல விஷயங்கள் ஸ்டார் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனிடையே படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குநர் இளன் பல நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார். அதில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், கவின் ஸ்டார் படத்துக்குள் வந்தது எப்படி? என்பது பற்றி பேசியுள்ளார். அதாவது, “ஹரிஷ் கல்யாணை வைத்து தான் முதலில் ஸ்டார் படம் தொடங்கினோம். கொரோனா பரவல் தொடங்கியது. அதனால் ஷூட்டிங் எப்போ ஆரம்பிப்போம் என யாருக்கும் தெரியவில்லை. அதனால் அப்போது ஸ்டார் படத்தை எடுக்காமல் கைவிட்டோம். திரும்ப ஆரம்பிக்கலாம் என நினைக்கும்போது நடைபெற்ற சம்பவங்கள் காரணமாக கவின் உள்ளே வந்தார்.
இந்த படம் அவருக்கு ரொம்ப நெருக்கமான ஒன்றாகும். நான் கதை சொல்லி முடித்ததும் இதில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் என் வாழ்க்கையிலும் நடந்திருக்குது என சொன்னார். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. இதை நான் இப்போது சொல்ல முடியாது. ஸ்டார் படத்தில் இடம்பெற்ற முக்கியமான விஷயம் கவின் வாழ்க்கையில் நடந்துள்ளது. நான் அதை கேட்கும்போது மேஜிக்காக தோன்றியது. நான் எப்போதோ எழுதிய கதை, கடைசியில் ஒரு ஹீரோவுக்கு வந்து நிக்குது. அந்த ஹீரோ கதையில் இருக்கும் சம்பவங்கள் எனக்கு நடந்தது சொன்னது ஆச்சரியமா இருந்துச்சு. ஒரு கதை அங்க இங்க சுற்றிவிட்டு கவினிடம் தான் வர வேண்டும் என இருந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.