வாழைப்பழத்தை ஊட்டிவிட முடியாது...ரசிகர்கள் விமர்சனம் பற்றி இயக்குநர் பாலா
இயக்குநர்களைக் காட்டிலும் ரசிகர்கள் புத்திசாலியானவர்கள் என தன்னிடம் இயக்குநர் பாலுமகேந்திரா கூறியதாக இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்
வணங்கான்
சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா பிதாமகன் , நந்தா , நான் கடவுள் , பரதேசி , அவன் இவன் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கியவர். பாலா திரையுலகத்திற்குள் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் கடந்துள்ளன. தற்போது அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கியுள்ள படம் வணங்கான். ரோஷினி நாயகியாக நடிக்க , மிஸ்கின் , சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. வணங்கான் படத்தின் ரிலீஸை ஒட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலா ரசிகர்களைப் பற்றி தன்னுடய கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
பாலுமகேந்திராவிடம் கற்றுக் கொண்ட பாடம்
" பாலுமகேந்திரா என்னிடம் சொன்ன ஒரு விஷயம். " ஒருத்தருக்கு பசித்தால் வாழைப்பழத்தை கொடு. அது உரிக்க முடியாத அளவு இருந்தால் உரித்து கொடு. அதை ஊட்டிவிடுவது உன் வேலை இல்லை. அவனுக்கு அதற்கான அறிவு இருக்கிறது. ஒரு இயக்குநராக நீ 10 முதல் 15 படம் எடுப்பாய் ஆனால் அவன் நூற்றுக்கும் மேற்பட்ட படம் பார்ப்பவர். உன்னைவிட அவனுக்கு தான் அறிவு அதிகம். ஒரு படம் பார்த்தால் அது நன்றாக இருக்கா அதில் என்ன பிழை இருக்கிறது என்பதை ரசிகனலா எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். நீ ஒரு கருத்தை சொல்லு அதை நான் பார்த்து புரிந்துகொள்கிறேன். எனக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்கிற அகம்பாவம் எல்லா ரசிகரிடமும் இருக்கிறது. அது நல்லதும் கூட" என்று பாலா தெரிவித்துள்ளார்
ஒரு படம் விமர்சிக்கப்பட்டால் அந்த படத்தை ரசிகர்கள் புரிந்துகொள்ளவில்ல என பழியை தூக்கி ரசிகர்களின் மேல் போடும் வழக்கமும் இங்கு நடந்து வருகிறது. சமீபத்தில் இந்தியன் 2 படத்தை ரசிகர்கள் விமர்சித்தபோது சித்தார்த் பாபி சிம்ஹா உள்ளிட்ட நடிகர்கள் ரசிகர்களை விமர்சித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
While many directors blame Audience for their mistakes, here is what Director #Bala rightly says & respects the audience 🫡👏
— AmuthaBharathi (@CinemaWithAB) December 29, 2024
"Directors take only 10-15 films, but audience watch more than 100s of films. So the audience are more wiser than directors🔥"pic.twitter.com/tnKYI9ElsG