Selvaraghavan: ‘பட அப்டேட் கேட்டா.. இவரு என்ன பண்றாருன்னு பாருங்க’ - இணையத்தில் செல்வராகவன் வீடியோ வைரல்..!
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் என ஏகப்பட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார். தமிழின் ‘லெஜண்ட் இயக்குநர்கள்’ வரிசையில் ஒருவராகவும் திகழ்கிறார்.
நடிப்பிலும் மிரட்டிய செல்வராகவன்
இயக்கம் மட்டுமல்லாது நடிப்பிலும் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் களம் கண்டார். தொடர்ந்து சாணிகாயிதம், நானே வருவேன், பகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் செல்வா மீண்டும் இயக்கத்தில் களம் இறங்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதேசமயம் அவர் அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ரசிகர்களை குழப்பிய பதிவுகள்
கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவ் ஆக இருக்கிறார் செல்வராகவன். அவ்வப்போது வாழ்க்கையின் அனுபவங்களை தத்துவங்களாக அவர் பதிவிடுவது உண்டு. இதனைப் பார்த்த ரசிகர்கள், ‘செல்வாவுக்கு என்ன ஆச்சு.. ஏன் வாழ்க்கையை வெறுத்த மாதிரி பதிவுகளை வெளியிடுகிறார்?’ என்ற கேள்வியையும் குழப்பத்தையும் ரசிகர்களிடத்தில் எழுப்பினார். அதேசமயம் தனது குழந்தைகளுடன் இருக்கும் போட்டோ, வீடியோக்களையும் இணையத்தில் வெளியிடுவார்.
அந்த வகையில் நேற்றைய தினம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தன் மகனை வைத்து குழந்தைகளுக்கான சைக்கிளை ஓட்டிச் செல்லும் காட்சி அதில் இடம் பெற்றிருந்தது. அதனை ஓட்ட முடியாமல் ஓட்டும் அவரை பார்த்து, தந்தையின் அன்பு என ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். சிலர், படத்தின் அப்டேட் கேட்டா, இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என கிண்டலாக கேட்டுள்ளனர்.
View this post on Instagram