Ponniyin Selvan 2: ’குந்தவை.. நந்தனி.. பூங்குழலியை விடுங்க’.. பொன்னியின் செல்வனில் வந்த இந்த பெண் யார் தெரியுமா?
பொன்னியின் செல்வன் பாகம் 2ல் ராஷ்ட்ரக்கூட மன்னரின் மகளாக வரும் நடிகை பற்றிய தேடல் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ள நிலையில் அவரைப் பற்றி காணலாம்.
பொன்னியின் செல்வன் பாகம் 2ல் ராஷ்ட்ரக்கூட மன்னரின் மகளாக வரும் நடிகை பற்றிய தேடல் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ள நிலையில் அவரைப் பற்றி காணலாம்.
ரசிகர்களை கவர்ந்த 2ஆம் பாகம்
70 ஆண்டுகால தமிழ் சினிமாவின் கனவு ஒரு வழியாக நிறைவேறியுள்ளது. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, நாவல் படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் ஃபேவரைட் படமாக பொன்னியின் செல்வன் பாகம் 1 அமைந்தது. வசூலிலும் இப்படம் ரூ.500 கோடியை கடந்தது.
இதனைத் தொடர்ந்து 2ஆம் பாகம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு இந்த பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை, மே தின விடுமுறை என தொடர் விடுமுறைகளால் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக பொன்னியின் செல்வன் திரையிடப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா துலிபாலா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஜெயசித்ரா, பிரகாஷ்ராஜ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
யார் அந்த நடிகை?
பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தில் ராஷ்ட்ரக்கூட மன்னன் மகளாக ஒருவர் காட்டப்பட்டிருப்பார். அவரைக் கொண்டு மதுராந்தகனை வளைக்கும் திட்டத்தை ராஷ்ட்ரகூட மன்னன் கையில் எடுத்திருப்பார். இரண்டு காட்சிகளில் மட்டுமே அந்த நடிகை நடித்திருப்பார். வசனங்களும் இருக்காது. ஆனால் அவரது அழகு ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம். படம் வெளியான நாள் முதல் யார் அந்த நடிகை? என சமூக வலைத்தளங்களில் பலரும் தேடி வருகின்றனர்.
அந்த நடிகையின் பெயர் ஸ்ரீமா உபாத்யாயா (Shreema Upadhyaya) ஆகும். இவர் பெங்களூருவைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் ஆவார். கடந்த 19 ஆண்டுகளாக அவர் இந்த கலையில் சிறந்து விளங்குகிறார். 4 வயதில் நடனமாட தொடங்கிய நான் நடனக்கலைஞரான அவரது அம்மாவின் மூலம் பரதக்கலையை கற்றுக் கொண்டதாக ஸ்ரீமா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Ponniyin Selvan 2: 'அந்த கேரக்டரை இப்படியா பண்ணுவீங்க’ .. பொன்னியின் செல்வன்-2 படம் குறித்து வனிதா விஜயகுமார் கருத்து!