மேலும் அறிய

Ponniyin Selvan 2: 'அந்த கேரக்டரை இப்படியா பண்ணுவீங்க’ .. பொன்னியின் செல்வன்-2 படம் குறித்து வனிதா விஜயகுமார் கருத்து!

ponniyin selvan 2:பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஐஸ்வர்யா ராய் கேரக்டர் தனக்கு கொஞ்சம் ஏமாற்றமளித்ததாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஐஸ்வர்யா ராய் கேரக்டர் தனக்கு கொஞ்சம் ஏமாற்றமளித்ததாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் "பொன்னியின் செல்வன்” நாவலானது இரண்டு பாகங்களாக படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஜெயராம்,  கார்த்தி, த்ரிஷா, பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஷோபிதா துலிபாலா,  ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என பலரும் நடித்த நிலையில், முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) உலகமெங்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. 

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் படம் மணிரத்னத்தின் புனைவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நாவல் படித்தவர்கள் கூறுகின்றனர். இப்படி இருவேறு கருத்துகள் நிலவினாலும் பொன்னியின் செல்வன் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலிலும் உலகளவில் இப்படம் ரூ.100 கோடியை கடந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்துவிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கும்ன்னு நாம எதிர்பார்க்கிறோமோ அப்படி தான் இருக்கும். நான் பொன்னியின் செல்வன் கதை படிச்சது இல்ல. முதல் பாகம் பார்த்து கதை புரிந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் பார்க்க வந்தேன். இந்த கதை புரியாதவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் சிறப்பாக உருவாக்கி உள்ளார்கள். திரைக்கதை, காட்சிகள், கேரக்டர்களுக்கான முக்கியத்துவதை சரியாக கொடுத்துள்ளார்கள்.  இது நிச்சயம் வரலாற்றில் முக்கியமான படமாக இருக்கும். 

இளம் வயதினருக்கு வந்தியத்தேவன் கேரக்டர் பிடிக்கும். தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு பிடிக்கும். அவர் இருந்தால் போர் அடிக்காது என்பதால் தான் மணிரத்னம் கார்த்திக்கு அந்த கேரக்டரை கொடுத்துள்ளார் என நினைக்கிறேன். எனக்கு ஒரு சின்ன மன வருத்தம் இருக்குது. ஐஸ்வர்யா ராய் ரசிகையாக இதை சொல்றேன். இந்த படத்தில் அவரை இளமையாக காட்ட வேண்டும் என்பதற்காக மேக்கப் உள்ளிட்ட வேலைகள் செய்திருக்கிறார்கள். அது கொஞ்சம் செயற்கையாக இருந்தது. அதேசமயம் ஊமை ராணி கேரக்டரில் மேக்கப் இல்லாமல் அழகாக இருந்தார்” எனவும் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க..

Summer: கொளுத்தும் வெயில்: பார்த்து பாதுகாப்பா உடலை பராமரிப்பது எப்படி? எளிய டிப்ஸ் இதோ!

Salman Khan: ‘பெண்களின் உடல் மதிப்புமிக்கது; அது ஆடைகளால் மூடப்பட வேண்டும்’ - நடிகர் சல்மான்கான்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Embed widget