“ப்ரோபோஸ் பண்ணேன்.. நோ சொல்லிட்டாங்க.. அப்புறம் நடந்ததே வேற” - நடிகர் கிட்டியின் சுவாரஸ்ய காதல் கதை தெரியுமா?
தமிழ் சினிமாவின் வெரைட்டியான நடிகராக அறியப்படும் கிட்டி என்கிற கிருஷ்ணமூர்த்தி தனது காதல் கதை குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் வெரைட்டியான நடிகராக அறியப்படும் கிட்டி என்கிற கிருஷ்ணமூர்த்தி தனது காதல் கதை குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கிட்டி என்ற அடைமொழியோடு அனைவராலும் அறியப்படும் நடிகர் கிருஷ்ணமூர்த்தி 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சத்யா, சூரசம்ஹாரம், துர்கா, தளபதி, சூரியன், பாட்ஷா, பம்பாய், அருணாச்சலம், பத்ரி, பாபா, விண்ணைத் தாண்டி வருவாயா, பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களிடத்தில் நன்கு பிரபலமானார்.
மேலும் 4 சீரியல்களிலும், தமிழில் தசரதன், கிருஷ்ணா ஆகிய இரு படங்களையும் இயக்கியுள்ளார். அதேபோல் டப்பிங் ஆர்டிஸ்டாக காதலன், மின்சார கனவு, கன்னெதிரே தோன்றினாள், உயிரே, செல்லமே, 24 ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கிட்டி தனது மனைவியுடன் பங்கேற்று தங்கள் காதல் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதன்படி, “கிட்டி தான் மீனாவை முதல்முறையாக பார்த்துள்ளார். மும்பையில் இவர் இருந்த பில்டிங்கிற்கு எதிர் பில்டிங்கில் மீனாவின் தாத்தா, பாட்டி, மாமா எல்லாரும் இருந்துள்ளார்கள். இதனிடையே 11 ஆம் வகுப்பு படிக்கும்போது மீனா குடும்பத்துடன் மும்பைக்கு வந்துள்ளார். அப்போது எதிர்ல கிட்டி நண்பர்களுடன் இருந்தாராம். அப்போது மீனாவை கண்டதும், இந்த பொண்ணை தான் நான் கல்யாணம் பண்ணப்போறேன் என நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். 51 ஆண்டுகளானாலும் இன்னும் மீனாவை முதல்முறையாக பார்த்த காட்சியை நியாபகம் வைத்துள்ளார்.
தொடர்ந்து நேர்காணலில் பேசிய கிட்டி, “மீனாவை பார்த்ததும் என் மனதில் தனியிடம் கிடைத்து விட்டது என நினைத்தேன். என்னுடைய அறை நண்பரிடம் இதைப்பற்றி சொன்னேன். நான் முதலில் ப்ரோபோஸ் பண்ணியதும் நோ சொல்லிவிட்டார். அதன்பிறகு மீனாவின் அம்மாவை அருகிலுள்ள பூங்காவுக்கு அழைத்து சென்று சம்மதம் பெற்றேன். அதன்பிறகு இவரிடம் பேசி சம்மதம் பெற்றேன்.
வெற்றிகரமான கல்யாண வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் முதலில் இருவரிடத்திலும் பரஸ்பரம் மரியாதை இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு முன்னால் தாழ்த்தி பேசக்கூடாது என மீனா தெரிவித்துள்ளார். மேலும் கிட்டி நடித்த படங்களில் தனக்கு பாட்ஷா படம் மறக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.