மேலும் அறிய

Dhrishyam : முதல் முறையாக கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படும் இந்திய படம்.. த்ரிஷ்யத்துக்கு கிடைச்ச புகழ்..

மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.முதல் முறையாக கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படும் இந்தியப் படம் த்ரிஷ்யம்

இதுவரை நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட த்ரிஷ்யம் திரைப்படம் தற்போது ஐந்தாவது முறையாக கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில்  மலையாள மொழியில் வெளிவந்தப் படம் த்ரிஷ்யம்.ஜீது ஜோஷப் இயக்கி மோகன்லால் மீனா ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்தார்கள். ஒரு சாமானியன் எதிர்பாராத ஒரு நிகழ்வில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளே த்ரிஷ்யம் படத்தின் கதை. மலையாளத்தின் இந்தப் படம் பெரும் வரவேற்பை  பெற்றதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. கமல்ஹாசன் , கெளதமி, நிவேதா தாமஸ் ஆகியவர்கள் இந்தப் படத்தை இயக்கினார்.இதனைத் தொடர்ந்து இந்தியில் அஜய் தேவ்கன் கஜோல் நடிப்பில் வெளியானது த்ரிஷ்யம்.அத்தனை மொழிகளிலும் இயக்குனர் ஜீது ஜோசப். ஒரே படத்தை இயக்கி கிட்டதட்ட ஐந்து மொழிகளில் இயக்குனராக உருவெடுத்தவர் ஜீது ஜோசப். கடந்த 2021 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

தற்போது  த்ரிஷ்யம் படத்தை கொரிய மொழியில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பனோரமா திரைப்பட நிறுவனம் தென்கொரியத் திரைப்பட நிறுவனமான ஆந்தலாஜி ஸ்டுடியோஸுடன் இந்தப் படத்தை ரீமேக் செய்வதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ள தகவலை சர்வதேச கான் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தனர்.

ஒரு இந்தி மொழிப்படம் கொரிய மொழியில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை என தெரிவித்தார் தயாரிப்பாளர் பாதக்.த்ரிஷ்யம் படத்தின் பன்மொழி ரீமேக் செய்யும் உரிமம் பாதகிட உள்ளது. ’இதுவரை கொரியப் படங்களைப் இந்திய ரசிகர்கள் கொண்டாடி வந்திருக்கிறார்கள்,தற்போது முதல் முறையாக  இந்தியத் திரைப்படங்களின் மேல் கவனம் திரும்பி இருக்கிறது. இந்த முயற்சி சர்வதேச அளவில் இந்தித் திரைப்படங்களை கொண்டு சேர்க்கும்” என அவர் தெரிவித்தார்.

த்ரிஷ்யம் திரைப்படத்தை ரீமேக் செய்யும் கொரிய நிறுவனமான ஆந்தலாஜி ஸ்டுடியோ கொரியத் திரைப்பட இயக்குனரான கிம் ஜீ வுன் மற்றும் பாரசைட் திரைப்பட நடிகரான சாங் காங் ஹோ ஆகியவர்களால் தொடங்கப்பட்டுள்ளது.

”இந்தியாவின் மிகப் பிரபலமான ஒரு படத்தை கொரிய மொழியில் ரீமேக் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் முடிந்த மட்டும் இந்த படத்தின் கதையை குலைக்காமல் அதே நேரத்தில் அதி கொரிய படத்தின் கூறுகளையும் சேர்ந்து உருவாக்கவே முயற்சி செய்யத் திட்டமிட்டுள்ளோம்.அதே நேரத்தில் இந்த தொடர்ச்சியாக இந்த இரண்டு மொழிகளிலும் நிறைய புதிய கதைகளை ரீமேக் செய்வதும் எங்களது திட்டமாக இருக்கிறது” என தெரிவித்தனர் ஆந்தாலஜி ஸ்டுடியோஸின் நிறுவனர்கள் விரைவில் த்ரிஷ்யம் படத்தின் வேலைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
ABP Premium

வீடியோ

OPS ADMK Alliance | TTV-க்கு பாஜக கொடுத்த TASK! கூட்டணிக்கு வருகிறாரா OPS? குக்கர் சின்னத்தில் போட்டி?
Maharashtra Police | ”அம்பேத்கரையே மதிக்கல என் வேலை போனாலும் பரவால” பாஜக அமைச்சர் vs பெண் POLICE
MK Stalin Warns KO Thalapathi |
Ramadoss vs DMK | திருமாவுக்காக கைவிரித்த திமுக! குழப்பத்தில் ராமதாஸ்! சைலண்டாக இருக்கும் விஜய்
Jothimani |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
American Warship Iran Houthi : நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
UGC Equity Regulation: யுஜிசி புது விதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆபத்தா? எழும் எதிர்ப்புகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
India-EU Trade Deal: குறையும் சரக்கு விலை; குஷியில் மதுப்பிரியர்கள்; எந்தெந்த பொருட்கள் மலிவாகும்.?
குறையும் சரக்கு விலை; குஷியில் மதுப்பிரியர்கள்; எந்தெந்த பொருட்கள் மலிவாகும்.?
Embed widget