Dhanush Aishwaryaa: ரஜினி வீட்டில் சமரசம்... மீண்டும் இணைகிறார்களா தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி?
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி தங்களது விவாகரத்து முடிவை தள்ளிவைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி தங்களது விவாகரத்து முடிவை தள்ளிவைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் தனுஷூம் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்களின் பெற்றோராக 18 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி 17 அன்று திருமண பந்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர்.
🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022
இந்த செய்தி திரை வட்டாரத்தில் பெரும் பரப்பை ஏற்படுத்திய நிலையில், தனுஷின் தகப்பனாரான கஸ்தூரி ராஜா அது சாதரண குடும்ப சண்டைதான் என பேட்டியளித்தார். இந்த நிலையில் தனுஷ் ஒரு பக்கம் தனது படம் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த சென்று விட, இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா உடற்பயிற்சி, இயக்குநர் சார்ந்த பணிகள் என அவர் சென்று விட்டார்.
View this post on Instagram
இதனிடையே மகனின் பள்ளி நிகழ்வு ஒன்றிற்காக இருவரும் இணைந்து இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த போட்டோவின் மூலம் மீண்டும் தனுஷ் ஐஸ்வர்யா இணைந்து விட்டதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் தனது திருமண வாழ்கையை தொடர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த தகவல்களின் படி, தனுஷ் ஐஸ்வர்யா ஆகிய இரண்டு பேரையும் குடும்பத்தினர், ரஜினி வீட்டில் வைத்து சமரசம் பேசியதாகவும், அவர்களது பேச்சில் உடன்பட்ட தம்பதி முயற்சி செய்வதாக கூறியதாகவும், இதனால் விவாகரத்து முடிவை தற்சமயத்திற்கு இருவரும் நிறுத்தி வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கடிந்து கொண்ட கஸ்தூரி ராஜா
தனுஷின் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவரது தந்தை கஸ்தூரி ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனுஷ்-ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இது நமக்கு சம்பந்தமில்லாத கேள்வி நீங்க கேட்க கூடாது” என டென்ஷனாக பதிலளித்தார். மேலும், “இதனாலதான் மீடியாவ மீட் பன்றதில்ல..” எனவும் கேள்வி கேட்டவரை கடிந்து கொண்டார்.