![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
AK 63: "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க" மீண்டும் அஜித்குமாருக்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்
அஜித் குமார் படத்திற்கு இரண்டாவது முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது
![AK 63: devi sri prasad to compose music for AK 63 director by adhik ravichandran AK 63:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/18/40ac9adf25aae685bdf764b435dfc1001705570773799572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் நடிக்க இருக்கும் AK 63 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.
விடாமுயற்சி
You know it's going to be electrifying when it comes to AK ⚡#VidaaMuyarchi is coming soon on Netflix in Tamil, Telugu, Malayalam, Kannada after theatrical release!#NetflixPandigai pic.twitter.com/1NIVzKMyqS
— Netflix India South (@Netflix_INSouth) January 17, 2024
அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். தடம் ,மீகாமன் உள்ளிட்டப் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்குகிறார். த்ரிஷா, அர்ஜூன் இந்தப் படத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்க நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துபாயில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. விடாமுயற்சி படம் குறித்தான அப்டேட்கள் பெரிதும் வெளியாகாத நிலையில் நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் தகவல்கள் வெளியாகியபடி உள்ளன.
AK 63
விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியபடி இருக்கின்றன். த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் AAA, பகீரா உள்ளிட்டப் படங்களை இயக்கினார்.
சமீபத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே சூரியா நடித்து அவர் இயக்கியிருந்த மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதும் இல்லாமல் பாக்ஸ் ஆஃபிஸின் 100 கோடி வசூல் செய்ததும் குறிப்பிடத் தக்கது. நீண்ட நாட்களாக தன்னிடம் அஜித்துக்கு கதை இருப்பதாக சொல்லிவந்த ஆதிக் ரவிச்சந்திரன் கனவு நினைவாகும் நாள் இன்னும் ரொம்ப தூரத்தில் இல்லை போலிருக்கிறது.
டி.எஸ் பி
தற்போது வெளியாகியுள்ள கூடுதலான தகவல் என்னவென்றால் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் அஜித் குமாருக்கு அவர் கொடுத்த பின்னணி இசை, மாஸான பாடல்கள், ரொமாண்டிக் பாடல் என மொத்த ஆல்பமும் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனது.
இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக இணைவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்திற்கா தேவி ஸ்ரீ பிரசாத் கடந்த ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத் தக்கது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)