deepika padukone : மார்பகங்களை பெரிதாக்குமாறு கூறியதே எனக்கு கிடைத்த மோசமான அறிவுரை - தீபிகா படுகோனே அதிர்ச்சி தகவல்..!
18 வயதில் எனது மார்பகங்களை பெரிதாக்குமாறு என்னிடம் கூறியதே மோசமான அறிவுரை என்று பிரபல நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே. இவருக்கென்று இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தீபிகா படுகோனே தனக்கு கிடைத்த மோசமான அறிவுரை மற்றும் நல்ல அறிவுரைகள் பற்றி பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக, தீபிகா கூறியிருப்பதாவது, என்னிடம் வந்து எனது மார்பகங்ளை பெரிதாக்குமாறு கூறியதே எனக்கு கிடைத்த மோசமான அறிவுரை ஆகும். எனக்கு 18 வயது இருந்தபோது இப்படி ஒரு அறிவுரை எனக்கு கிடைத்தது. அந்த வயதில் நான் அந்த மோசமான அறிவுரையை ஏற்காமல் தன்மையாக நடந்து கொண்டேன். அது எனக்கே மிகவும் வியப்பாக உள்ளது.
அதேசமயத்தில், திரைத்துறையில் ஷாரூக்கான் நல்ல அறிவுரைகளை வழங்குவார். அவர் எப்போதும் எனக்கு நிறைய நல்ல அறிவுரைகளை வழங்கியுள்ளார. படங்களில் நடிக்கும்போது நாம் நம் வாழ்க்கையை வாழ்கிறோம். அனுபவம் பெறுகிறோம். அதனால், நமக்கு யாருடன் பணியாற்ற விருப்பம் உள்ளதோ அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதுதான் ஷாரூக்கான் எனக்கு வழங்கிய அறிவுரைகளிலே சிறந்த அறிவுரை ஆகும் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க : Aishwaryaa-Simbu Combo: மாஸ் ஹீரோவுக்கான திரைக்கதை ரெடி.. சிம்புவுடன் கைகோக்கும் ஐஸ்வர்யா ரஜினி!? ரசிகர்கள் உற்சாகம்!
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே பிரபல நடிகர் ரண்வீர்சிங்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தீபிகா படுகோனே தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் கெஹ்ரையான் என்ற படம் வெளியானது. இந்த படத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாலிவுட் பிரபல நடிகை கங்கணா ரணாவத் கடுமையாக விமர்சித்திருந்தார். கடும் விமர்சனங்களை சந்தித்த இந்த படம் தோல்வியடைந்தது.
தற்போது, தீபிகா படுகோனே சித்தார்த் ஆனந்தன் இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷனுடன் இணைந்து பைட்டர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். சிறந்த நடிகையான தீபிகா படுகோனேவிற்கு இந்த படத்தில் வலுவான கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : Rashmika Mandanna YouTube: என்னைய பத்தி தெரிஞ்சுக்கணுமா.. இங்க வாங்க.. யூடியூப் சேனலில் முதல் வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்