Aishwaryaa-Simbu Combo: மாஸ் ஹீரோவுக்கான திரைக்கதை ரெடி.. சிம்புவுடன் கைகோக்கும் ஐஸ்வர்யா ரஜினி!? ரசிகர்கள் உற்சாகம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது மகள் ஐஸ்வர்யா. சமீபத்தில் இவருக்கும் தனுஷிற்கும் இடையே விவகாரத்தானது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், ஐஸ்வர்யா மீண்டும் தனது திரைத்துறையில் தன்னைத் தீவிரப்படுத்தி வருகிறார்.
ஐஸ்வர்யா தற்போது ஒரு திரைக்கதையை உருவாக்கி வருவதாகவும், அந்த கதைக்கு மிகப்பெரிய ஹீரோவை நாயகனாக்க வேண்டும் என்றும் அவர் விரும்பி வருகிறார். தற்போது, இந்த மாஸ் ஹீரோ கதைக்கு நடிகர் சிம்புவை நாயகனாக்க ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனது அடுத்த படத்திற்கான பணிகளை ஐஸ்வர்யா இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளார். படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு ஏதுமே இதுவரை தொடங்கப்படவில்லை. ஆனால். கதையின் நாயகனாக சிம்புவை வைத்து இயக்க அவர் முடிவு செய்துள்ளார் என்று மட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். கவுதம் கார்த்தியுடன் அவர் இணைந்து நடித்து வரும் பத்து தல படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நிறைவு பெற உள்ளது. இதனால், ஐஸ்வர்யாவின் அடுத்த படத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடிப்பதற்கு பெரும்பான்மையான வாய்ப்புகள் உள்ளது.
ஐஸ்வர்யா கடந்த 2012ம் ஆண்டு 3 என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார். முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருந்தார். பெருத்த எதிர்பார்ப்புடன் வெளியாகிய இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், பாடல்கள் அனைத்தும் மெகாஹிட் ஆனது.
இந்த படத்திற்கு பிறகு, 2015ம் ஆண்டு வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். 2017ம் ஆண்டு சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கினார். உடல் எடை அதிகரித்து அதிக படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த சிம்பு உடலை குறைத்து ஈஸ்வரன் படம் மூலமாக ரீ என்ட்ரி அளித்தார். பின்னர். மாநாடு என்ற மாபெரும் வெற்றிப்படத்தை அளித்தார். இதன்மூலம் சிம்பு கோலிவுட்டில் தனது கம்பேக்கை அளித்தார். இதனால், பல முன்னணி இயக்குனர்களும் மீண்டும் சிம்புவுடன் கைகோக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்