திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர் எஸ்.எம்.ஜெயராஜ்.
தனது மகன் ஹாரிஸ் ஜெயராஜை பெரிய பாடகராக்க வேண்டும் என ஆவல் கொண்டார்.
இசையமைப்பாளராக வேண்டும் என ஆர்வம் கொண்ட ஹாரிஸ் ஜெயராஜின் மனமும் குரலும் இதற்கு ஒத்துழைக்கவில்லை.
கிட்டார் வாசிப்பாளராக 1987-ல் தன்னுடைய 12-ம் வயதில் இசைப்பயணத்தை தொடங்கினார்.
பின்னர் கிட்டாருடன் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளையும் கற்றுக்கொண்டார்.
அதன் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் உள்ள இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் போன்ற பிரபல இசையமைப்பாளர்களுடனும் பணிபுரிந்துள்ளார்.
2001-ம் ஆண்டு ’மின்னலே’ படத்திற்கு முதன்முதலில் இசையமைத்தார். அதன் மூலமே திரைத்துறையில் தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்தார்.
சாமுராய், காக்க காக்க, கஜினி, அந்நியன், கோ, துப்பாக்கி போன்ற ஹிட் கொடுத்த படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
படங்கள் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் என்றுமே ஹிட் கொடுக்கும் பாடல்கள் தான் எனக் கூறப்படுகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இதுவரை 56 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.