மேலும் அறிய

Toxic: வெளியானது கேஜிஎஃப் நாயகன் யாஷ்ஷின் டாக்சிக் பட டீசர் - ஸ்டைலிஷான லுக், மிரட்டலான மேக்கிங்

Toxic: கேஜிஎஃப் நாயகன் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகியுள்ளது.

Toxic: கேஜிஎஃப் நாயகன் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

”டாக்சிக்” ஃபர்ஸ்ட் லுக்

கேஜிஎஃப் படத்தின் மூலம், இந்தியாவை தாண்டு உலகம் முழுவதும் யாஷ் பிரபலமாகியுள்ளார். அப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, சிறிது காலம் ஓய்விற்குப் பிறகு கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ”டாக்சிக்” எனும் படத்தில் யாஷ் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோவில்,“ காரிலிருந்து இறங்கும் யாஷ் ஒரு வெள்ளை உடை மற்றும் தொப்பிய அணிந்து, ஒரு சுருட்டைப் பிடித்தபடி, மிரட்டலான தோற்றத்தில் மெதுவாக நடந்தபடி, இரவு நேர மதுபான விடுதிக்குள் செல்வதை போல” காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை கொண்டாடி வரும் ரசிகர்கள், 'ராக்கி பாய் இங்கே இருக்கிறார், ராக்கி பாய் அர்ரைவல்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

களமிறங்கிய நட்சத்திர பட்டாளம்:

கேவிஎன் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படம், வரும் ஏப்ரல் 10ம் தேதியன்று வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முழுமையடையாததால் வெளியீடு தாமதமாகலாம் என கருதப்படுகிறது.  படத்தில் நடிக்கும் முழு நடிகர்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் கியாரா அத்வானி மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த, அக்‌ஷய் ஓப்ராய் இந்த படத்தில் இணைந்துள்ளார். தமிழில் நளதமயந்தி படத்தில் கீது மோகன் தாஸ், டாக்சிக் படத்தை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே,  மூத்தோன், பொய்யர் பகடை , மூத்தவன் ஆகிய படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் மாஃபியா பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தை, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வெங்கட் கே நாராயணா மற்றும் யாஷ் தயாரித்துள்ளனர். டாக்சிக் படத்தை தொடர்ந்து, நித்தேஷ் திவாரியின் ராமாயணத்தில் ராவணனாக யஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில்  ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதா தேவியாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
TVK: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டம்; விஜய் என்ன பேசினார்? தீர்மானங்கள் - ஹைலைட்ஸ்!
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Udhayanidhi: ”டெல்லியில் 3 கார் ஏறிய எடப்பாடி” - விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு - DY CM உதயநிதி அறிவிப்பு
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Karthigai Deepam: கண்டிஷன் போடும் கார்த்தி! கண்டுகொள்ளாத ரேவதி! வேண்டா வெறுப்பாக கல்யாணம்!
Embed widget