Chef Venkatesh Bhat: அடேங்கப்பா! வெங்கடேஷ் பட் சொத்து மதிப்பு இவ்வளவா? ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்
Chef Venkatesh Bhat : குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான செஃப் வெங்கடேஷ் பட் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
சமையலில் கலக்கும் ஒரு செஃப் என்றால் உடனே அனைவருக்கும் நியாபகம் வருபவர்கள் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட். அதிலும் இவர்கள் இருவரும் நடுவர்களாக இணைந்து கலக்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியாக கலக்கலாக இருந்தது.
வெங்கடேஷ் பட்:
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சில் நடுவராக இருந்ததன் மூலம் அறியப்பட்ட வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமானார். கடந்த நான்கு சீசன்களாக நடுவராக இருந்து அவர் கோமாளிகளுடன் சேர்ந்து அடித்த லூட்டிகள் தாறு மாறாக இருக்கும். அது ஒரு சமையல் நிகழ்ச்சி என்பதையும் கடந்த ஒரு காமெடி நிகழ்ச்சி என்றே சொல்லவேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் இல்லை என அவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவலைத் தொடர்ந்து, செஃப் தாமுவும் விலகுவதாக தெரிவித்து இருந்தார். இந்த தகவல் ரசிகர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடக்குமா? அப்படி ஒளிபரப்பட்டாலும் அதில் இவர்கள் இருவரும் நடுவர்களாக இல்லாமல் எப்படி இருக்கும்? இப்படி பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சொத்து மதிப்பு:
இந்நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. பிரபலமான சமையல்காரராக இருப்பதை காட்டிலும் பல சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் உலகளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் வெங்கடேஷ் பட். ஹோட்டல் சோழா ஷெரட்டானில் துவங்கிய இவரின் பயணம் அப்படியே படிப்படியாக பல ஸ்டார் ஹோட்டல்களில் பயணித்து 2007ம் ஆண்டுக்கு பிறகு பணியில் இருந்து விலகினார். சொந்தமாக பல பிராண்ட் உணவகங்களை தொடங்கி அதை ஒரு தொழிலாக செய்து வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மட்டுமின்றி பல யூடியூப் சேனல்களையும் வைத்துள்ளார். அவரின் சமையலுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் மற்றும் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். அவர் சமையல் டிப்ஸ் கொடுக்கும் விதம், அவர் தெளிவாக விளக்கும் விதம் என அனைத்தையும் ரசிகர்கள் அவரிடம் அதிகம் விரும்புவார்கள். மேலும் சொந்தமாக சமையல் பாத்திரங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்.
இப்படி பல வகையிலும் வருமானம் ஈட்டும் செஃப் வெங்கடேஷ் பட் சொத்து மதிப்பு சுமார் ஒரு மில்லியன் டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட அவரின் ரசிகர்கள் அடேங்கப்பா என வாய் பிளக்குகிறார்கள்.