Controversial Varisu Poster : என்னடா பண்ணிவச்சிருக்கீங்க! சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்கள்.. சலசலப்பில் வாரிசு ஆடியோ நிகழ்வு
நேரு உள்விளையாட்டு அரங்கில் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுவரும் நிலையில், வெளியில் சர்ச்சையை கிளப்பும் விஜய் போஸ்டர்களுடன் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
![Controversial Varisu Poster : என்னடா பண்ணிவச்சிருக்கீங்க! சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்கள்.. சலசலப்பில் வாரிசு ஆடியோ நிகழ்வு Controversial Vijay poster at Varisu audio launch today evening at Nerhu indoor stadium Controversial Varisu Poster : என்னடா பண்ணிவச்சிருக்கீங்க! சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்கள்.. சலசலப்பில் வாரிசு ஆடியோ நிகழ்வு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/24/1ad63f61155b2a376a43766ebe8aa0681671885425654224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இளைய தளபதி விஜய்யின் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. விஜய் நடிப்பில் இதற்கு முன்னர் வெளியான 'பீஸ்ட்' படத்தின் இசை வெளியீட்டு விழா சில காரணங்களால் நடைபெறாததால் மிகவும் ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு வாரிசு இசை வெளியீட்டு விழா புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.
விஜய் ரசிகர்கள் இந்த தருணத்திற்காக வெறித்தனமாக பல நாட்களாக காத்துக் கொண்டு இருந்தார்கள். இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொல்ல போகும் குட்டி ஸ்டோரிகாக கூடுதல் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
தளபதியின் பேச்சை கேக்காத ரசிகர்கள் :
மிகவும் ஆர்வமாக நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சியில் சில பரபரப்பு ஏற்படுத்தும் விஷயங்கள் நடைபெற்றுள்ளன. சமீபத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து பேசியபோது அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி போஸ்டர்கள் பேனர்கள் வைக்கக்கூடாது என கூறியதாக சொல்லப்பட்டது. ஆனால் இதனையும் பொருட்படுத்தாமல் விஜய் ரசிகர்கள் பல சர்ச்சையை கிளப்பும் பேனர்களை இசை வெளியீட்டு விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் வெளியே பிடித்துக்கொண்டு இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
சென்னையில் மட்டுமின்றி மதுரையிலும் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களும் அஜித், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களை தாக்கும் வகையில் உள்ளன. விஜய் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டும் எது வேண்டாம் என அவர் சொன்னாரோ அதையே செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் ரசிகர்கள்.
Controversial poster on the eve of Varisu release. pic.twitter.com/6f5zRk6H8b
— Blue Sattai Maran (@tamiltalkies) December 24, 2022
சர்ச்சைக்குரிய போஸ்டர் :
திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் உதயநிதி ஸ்டாலினுடன் சம்பந்தப்படுத்தி சர்ச்சைக்குரிய விஜய் போஸ்டரை ஒட்டியுள்ளனர் என்பதை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)