இட்ஸ் மீ...என்னது வடிவேலு இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா! இத்தன நாளா தெரியாம போச்சே!
நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு தற்போது மறுபடியும் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடும் வகையில் சமூக வலைதளத்திலும் தனது பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வடிவேலு தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்
மீண்டும் திரையில் வடிவேலு
தமிழ் சினிமாவின் தனித்துவமான அடையாளங்களில் ஒருவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. கோலிவுட் சினிமாவின் நீண்ட நகைச்சுவை நடிகர்கள் பட்டியலில் ரசிகர்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை பிடித்தவர் என்றால் வடிவேலு தான். 200 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலு ஒரு சிறந்த குணச்சித்திர நடிகரும் கூட. 2011 ஆம் சட்டமன்ற தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாக தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு எதிராக வடிவேலு பிரச்சாரம் செய்தார். இதனால் அவரை திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதித்தது தயாரிப்பாளர் சங்கம். 2021 ஆம் ஆண்டு நாய் சேகர் ரிடர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார் வடிவேலு. நகைச்சுவை நடிகராக மட்டுமே இல்லாமல் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் உணர்வுப்பூர்வமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து ஃபகத் ஃபாசிலுடன் மாரீசன் படத்தில் நடித்தார். சுந்தர் சியுடன் இணைந்து கலகலப்பான கேங்கர்ஸ் படத்தில் நடித்தார்.
இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய வடிவேலு
தொலைக்காட்சியில் 90ஸ் கிட்ஸ்களை மகிழ்வித்த வைகை புயல் வடிவேலு தற்போது சமூக வலைதளத்திற்கும் வருகை தந்துள்ளார். vadivelusn.official என்கிற பெயரில் வடிவேலு தனது புதிய இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். தன்னுடைய இணைய நண்பர்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சி என தனது பதிவில் அவர் கூறியுள்ளார். இனி பட வேலைகள் இல்லாதபோது வடிவேலு தனது தனித்துவமான நகைச்சுவை பாணியில் ரீல்ஸ் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்
View this post on Instagram





















