மேலும் அறிய

Comedian Jayamani: வடிவேலுவைத் திட்டினால் பெரிய ஆளா..? சக நடிகர்களை சரமாரியாக தாக்கும் ஜெயமணி

Comedian Jayamani: வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும்  இடையில் பெரிய பிரச்சினை நடந்தது. அவர் வீடியோ மூலமாவது அல்லது ஒரு இரங்கலையாவது தெரிவித்து இருக்கலாம்...

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் செந்தில் போலவே தோற்றமளிக்கும் ஒருவர் தான் நடிகர் ஜெயமணி. ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக பரிச்சயமானவர். நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்த வராதது குறித்து ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து நடிகர் ஜெயமணி சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 

Comedian Jayamani: வடிவேலுவைத் திட்டினால் பெரிய ஆளா..? சக நடிகர்களை சரமாரியாக தாக்கும் ஜெயமணி
”கடந்த 2023ம் ஆண்டு திரையுலகத்தில் ஏராளமான உயிர் இழப்புகள் ஏற்பட்டது. அதிலும் ஆண்டு முடியும் தருவாயில் கூட கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தது மிக பெரிய துயரத்தை ஏற்படுத்தியது. அவரின் மறைவுக்கு அலைகடல் போல மக்கள் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆனால் அவரின் இறப்புக்கு நடிகர் வடிவேலு வராததை வைத்து சோசியல் மீடியாவில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். இது மிகவும் தவறான ஒரு செயல். வடிவேலுவை பிடிக்காதவர்கள்தான் இது போல தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். 

வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும்  இடையில் பெரிய பிரச்சினை நடந்தது. அவர் வீடியோ மூலமாவது அல்லது ஒரு இரங்கலையாவது தெரிவித்து இருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. அதற்காக என்ன செய்ய முடியும். அவர் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது அத்தனை பேரும் அவர் பின்னாடி வாலை ஆட்டிக்கிட்டு போயிட்டு இருந்தாங்க. வாசலில் போய் காத்துக்கிடந்தாங்க. ஆனா இப்போ அவர் மார்க்கெட் குறைஞ்சு போனதால அவரால வாய்ப்பு கிடைத்து அடையாளம் காணப்பட்டவனுங்க எல்லாரும் அவன் சரியில்லை, அவனோட இனி நான் நடிக்க மாட்டேன் அப்படின்னு வந்து பேட்டி கொடுக்குறானுங்க. வளர்த்து விட்டவரேயே இப்படி பேசலாமா?

போண்டா மணி இறந்த சமயத்தில் அவரோட குடும்பத்துக்கு வடிவேலு பணம் கொடுக்கவில்லை என பயங்கரமாக பேசுகிறார்கள். அவர் ஏன் பணம் கொடுக்கணும்? அவர் இப்போ மார்க்கெட்டுல இல்லவே இல்லையே. ரஜினி,கமல்,அஜித், விஜய்கிட்ட எல்லாம் போய் பணம் கேட்க வேண்டியதுதானே. அவர் செய்யணும் என நினைச்ச இருந்தா செய்து இருக்கலாம். ஆனா அவர் செய்யல, அவர் மனசுல என்ன இருக்கோ தெரியல... அதுக்கு என்ன பண்ண முடியும். வடிவேலுவை திட்டினால் நாம பெரியா ஆளா ஆயிடலாம் என தப்பு கணக்கு போட்டு இப்படி பண்ணறாங்க.

Comedian Jayamani: வடிவேலுவைத் திட்டினால் பெரிய ஆளா..? சக நடிகர்களை சரமாரியாக தாக்கும் ஜெயமணி
சோசியல் மீடியாவில் அவர் பத்தி தப்பு தப்பா வீடியோ போடுறது ரொம்ப தப்பு. உனக்கு பிரச்சினை என்றால் நேரடியாக வடிவேலுக்கிட்டே போய் கேட்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு அவன்கிட்டேயும் இவன்கிட்டேயும் எதுக்கு போய் கேக்கணும். 

வடிவேலு மரியாதை கொடுக்கமாட்டாரு, தரக்குறைவா பேசுவாரு, எங்களை இழிவு படுத்துவாரு என அவர் கூட நடிச்சவனுங்க எல்லாரும் சொல்றாங்க இல்ல அப்ப எதுக்கு அவரு கிட்ட போகணும், காத்து கிடக்கணும், காலிலேயே விழுந்து கிடக்கணும். அவரு வாய்ப்பு கொடுப்பாரா என எதிர்பார்த்து பின்னால வளர்ந்ததுக்கு அப்புறம் அவரை அசிங்கபடுத்துறது தேவையா? 

இன்று இருக்கும் ஹீரோக்கள் பலரும் ரசிகர்கள் அவர்களை நெருங்குகிறார்கள் என்றால் அவர்களின், உதவியாளர்களை வைத்து விரட்டி அடிக்க தான் நினைக்குறாங்க. நேரில் பார்த்தா மட்டும் சும்மா அப்படியே பாசத்தை பொழிவது போல நடிக்குறாங்க. ஆனால் விஜயகாந்த் அப்படிப்பட்டவர் கிடையாது. ரசிகர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார். செட்டில் எல்லாரோடும் ரொம்ப நல்லா பழகுவார். மக்கள் செல்வாக்கு அதிகம் கொண்டவர். அவருக்கு மட்டும் உடல்நிலை நல்லா இருந்ததுன்னு இன்னைக்கு அவர் தான் முதலமைச்சராக இருந்து இருப்பார்” என்றார்  

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget