Cinema Headlines: விஜய்க்காக வருந்திய பார்த்திபன்: பூனம் பாண்டேவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கீழே காணலாம்.
கூகுளில் ட்ரெண்டான கர்ப்பப்பை புற்றுநோய்..பூனம் பாண்டேவின் செயலுக்கு குவியும் ஏச்சுக்களும், பாராட்டுக்களும்
தான் இறந்துவிட்டதாக பொய்யான தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை பெற்றுவந்த நடிகை பூனம் பாண்டேவுக்கு தற்போது பாராட்டுகள் அதிகரித்து வருகின்றன. சர்ச்சைக்குரிய நடிகையாக பாலிவுட் உலகில் வலம் வந்த பூனம் பாண்டே, உயிரிழந்துவிட்டதாக கடந்த 2 ஆம் தேதி தகவல் வெளியானது. கர்ப்பவாய் புற்றுநோய் காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இது குறித்து பதிவிடப்பட்டது. மேலும் படிக்க
ரூ.100 கோடி வருமானத்தை தியாகம் செய்யும் விஜய்! வேதனையுடன் வாழ்த்தி பார்த்திபன் பதிவு!
சினிமாவில் தனக்கு என இருக்கும் நவரத்தின கிரீடத்தை மக்கள் பணிக்காக விட்டுக் கொடுக்கும் அளவுக்கு இவ்வளவு பெரிய தியாகம் வேண்டுமா என விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தனக்கென மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த லியோ படம் பாக்ஸ் ஆபிசில் வெற்றிபெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மேலும் படிக்க
“இது விளையாட்டு இல்ல, காலம் என்னை அங்கு நிறுத்தும்” - 13 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் எண்ட்ரி பற்றி விஜய்!
சரியான நேரத்தில் தான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் விஜய் (Vijay) 13 ஆண்டுகளுக்கு கூறியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான தகவல்கள் சமீப காலங்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று பிப்ரவரி 2ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டார். மேலும் படிக்க
மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படத்தில் ஆபாச வார்த்தைகளை நீக்க சென்சார் போர்டு வலியுறுத்தல்
குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி, ஹரிஷ் குமார், கீதா கைலாசம் , ஹரிணி , நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மேலும் படிக்க
”முட்டாள்தனமான விஷால் பேச்சை தூக்கி குப்பையில் போடுங்க” - டென்ஷனான பாடலாசிரியர் பிரியன்!
நடிகர் விஷால் பேசியது முட்டாள்தனம், அவரது பேச்சை தூக்கி குப்பையில் போடுங்கள் என அரணம் படத்தின் வெற்றி விழாவில் பாடலாசிரியர் பிரியன் பேசியுள்ளார். பிரபல பாடலாசிரியர் எழுதி ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் அரணம். ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகி இருந்த இந்த படம் மக்களின் வரவேற்பை பெற்று, 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதனால் அரணம் படத்தின் 25-வது நாள் கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடினர். மேலும் படிக்க
எம்டன் மகன் பாத்துட்டு நூத்தில் 90 பேர் இப்படி சொன்னாங்க: நடிகர் நாசர் உணர்ச்சிகரம்!
எம் மகன் படத்தில் அந்த கேரக்டர்களில் நடித்ததை பார்த்தவர்கள் என்னிடம் அப்படி தான் சொன்னார்கள் என நடிகர் நாசர் கூறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான மெட்டி ஒலி சீரியலை இயக்கியவர் திருமுருகன். அவர், முதன் முதலில் நாசர், பரத் நடித்த எம்.மகன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். படத்தில் நாசருடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், வடிவேலு எனப் பலர் நடித்திருந்தனர். படத்தில் அப்பாவுக்கு பயந்து நடுங்கும் மகனாக பரத் நடித்திருப்பார். மகனை மிகவும் கண்டிப்புடன் வளர்க்கும் நாசரின் கேரக்டர் அதிகமாக பேசப்பட்டது. மேலும் படிக்க
கானக்குயில் வாணி ஜெயராமின் முதலாமாண்டு நினைவு தினம் - ரசிகர்கள் அஞ்சலி
மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்தாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் வாணி ஜெயராம் கண்டெடுக்கப்பட்டார். அவரது மறைவு ஒட்டுமொத்த இசையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. கோடிக்கணக்கான ரசிகர்களை தன் இனிய குரலால் வசீகரித்த வாணி ஜெயராம் உயிரிழந்த போது அவருக்கு 78 வயதாகி இருந்தது. மேலும் படிக்க