‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்!
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்கிறார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக நடவடிக்கை கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக விஜய் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பிற்பகல் 1 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்கிறார். அப்போது அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு இல்லை என கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், அன்புத் தங்கைகளே!
— TVK Vijay Trends (@TVKVijayTrends) December 30, 2024
கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆரளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம்.
எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணாவாகவும், அரணாகவும். எனவே அதை பற்றியும் கவலை கொல்லாமல் கல்வியில் கவனம் செலுத்துஙகள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவாம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” என விஜய் தெரிவித்திருந்தார்.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசின் நடவடிக்கை முறையாக இல்லை எனக்கூறி அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர். சிறுமிகள், பெண்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி உள்ளது திமுகவின் திராவிட மாடல் அரசு என குற்றச்சாட்டு எழுந்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது பல்வேறு சந்தேகங்களையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.