மேலும் அறிய

Vijay: ரூ.100 கோடி வருமானத்தை தியாகம் செய்யும் விஜய்! வேதனையுடன் வாழ்த்தி பார்த்திபன் பதிவு!

Vijay: "நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை, நவரத்தின கிரீடத்தை கழற்றி வைக்க போகிறார் என்று மனம் சட்டென சங்கடம் கொண்டது" - நடிகர் பார்த்திபன்.

Vijay: சினிமாவில் தனக்கு என இருக்கும் நவரத்தின கிரீடத்தை மக்கள் பணிக்காக விட்டுக் கொடுக்கும் அளவுக்கு இவ்வளவு பெரிய தியாகம் வேண்டுமா என விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத, முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தனக்கென மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த லியோ படம் பாக்ஸ் ஆபிசில் வெற்றிபெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் (GOAT) படத்தில் விஜய் பிசியாக நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் லியோ 2 படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது. 
 
திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அரசியலில் ஆர்வம் கொண்ட விஜய் அதற்கான பணிகளில் சைலண்டாக ஈடுபட்டார். கடந்த ஆண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி பாராட்டியது, மாலை நேரக் கல்வி வழங்குவது, புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கியது உள்ளிட்ட பொதுப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட பணிகளை செய்து வந்த விஜய், விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது. 
 
அதன்படி, பிப்ரவரி 2ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டார். விஜய்யின் தமிழக வெற்றி  கழகம்  (Tamizhaga Vetri kazhagam) வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு திரைப் பிரபலங்களும், முன்னணி கட்சித் தலைவர்களும், ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய்க்கு நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த வாழ்த்து செய்தியில், “நூறு கோடிக்கு மேல் சன்மானம் பெரும் விஜய், தன் வருமானத்தை தியாகம் செய்துவிட்டு மக்கள் பணிபுரிய முழு நேர அரசியல்வாதியாக முன்வருவது பாராட்டுக்குரியது. 
 
நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை, நவரத்தின கிரீடத்தை கழற்றி வைக்கப் போகிறார் என்று மனம் சட்டென சங்கடம் கொண்டது. வேண்டுமா இவ்வளவு தியாகம்..? மக்கள் பணிக்காக ரியல் ஹீரோவாக உயரும் விஜய்யை வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget